தாய்லாந்தில் பிரதமர் பதவி விலகாததால் மீண்டும் போராட்டக்களத்தில் குதித்த ஆயிரக்கணக்கான மக்கள்!

Report Print Karthi in ஆசியா
52Shares

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதிவி விலகுவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால் மக்கள் மீண்டும் தங்கள் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

நாட்டின் முடியாட்சிக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தற்போதைய பிரதமர் ஓச்சா பதவி விலக மக்கள் கோரியிருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று அவர் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவர் அது குறித்த எதிர்மறையாக கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து தலைநகர் பாங்காங்கில் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

பிரதமர் பதவி விலகவில்லையெனில் நாங்கள் அதை வலியுறுத்தி நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்குழுக்களின் தலைவரான ஜதுபத் பூன்பட்டரராக்ஸா தெரிவித்துள்ளார்.

வரும் திங்கள் மற்றும் செவ்வாய் அன்று நடக்க இருக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கப்படும் என்றும், எனவே அவர் பதவி விலக மாட்டார் என்றும் பிரதமர் அலுவலகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

ஆனால், பிரதமரின் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள நாடாளுமன்றத்தில் இதுபோன்ற விவாதங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்றும், பிரதமரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய போராட்டத்தில் காவல்துறையினர் அதிக அளவு பாதுகாப்பு பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அரசு தரப்பில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சட்டத்தினை மதிக்கவும், அதே நேரத்தில் அமைதியாக இருக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்