இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளா?

Report Print Aravinth in ஜோதிடம்
மேஷம்

செல்வ நிலை உயரும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்சியை வழங்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்

வளர்ச்சி கூடும் நாள். புகழ் அதிகரிக்கும். கடிதங்கள் சுபச்செய்திகளைக் கொண்டுவந்து சேர்க்கும். திட்டமிட்ட சில காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு உண்டு.

மிதுனம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உங்களின் வேலையன்றை உடன்பிறப்புகள் மூலம் முடித்துக் கொள்வீர்கள். சுபச்செய்தி உண்டு.

கடகம்

இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். நீண்ட நாட்களாக உங்கள் வீட்டிற்கு வராத உறவினர் ஒருவர் இன்று திடீரென வரலாம்.

சிம்மம்

வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்குமோ என நினைத்த காரியமொன்று நல்ல படியாக நடக்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

கன்னி

வீட்டுப் பராமரிப்புச் செலவு கூடும். ஒரு வகையில் வந்த வரவுகள் மற்றொரு வழியில் செலவாகலாம். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பெருமைகள் ஏற்படும்.

துலாம்

தொழில் ரீதியாக உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். பொது வாழ்வில் புகழ் கூடும். குடும்பத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்

பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்நாள். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்துதவ முன்வருவர். பெரிய மனிதர்கள் இல்லம் தேடி வரும் வாய்ப்பு உண்டு.

தனுசு

நேற்றைய பிரச்சினையன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். மறதியால்விட்டுப் போன காரியமொன்றை மீண்டும்செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

வழிபாட்டால் வளர்ச்சியைக் காண வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வேலைகள் உடனுக்குடன் முடியாமல் நண்பர்கள் இழுத்தடிக்கலாம். தொழில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கும்பம்

நீண்ட தூரப் பயணங்கள் செல்வதில் நாட்டம் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியே வரவு வந்து சேரலாம். தொழில் சம்பந்தமாக சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும்.

மீனம்

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments