மேஷ ராசி அன்பர்களே வெற்றிகள் குவியும் நாள் உங்களுக்கு!

Report Print Aravinth in ஜோதிடம்
மேஷம்

வெற்றிகள் வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அரசு வழி அனுகூலம் உண்டு. இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி அனுகூலம் தரும். நண்பகலில் பகையொன்று நட்பாகலாம்.

ரிஷபம்

ஆனந்த வாழ்வுக்கு அடித்தளம் அமையும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.ஆற்றல் மிக்கவர்கள் பின்னணியாக இருப்பர். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

மிதுனம்

வியக்கும் தகவல் வீடு வந்து சேரும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் பயணமொன்று ஏற்படலாம்.

சிம்மம்

யோகமான நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரியமான சிலரின் சந்திப்பு கிட்டும்.

கன்னி

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். வெளியூர் பயணமொன்றால் கையிருப்பு கரையும். குடும்பத்தினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு பின்னர் வருத்தமடைய நேரிடலாம்.

துலாம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை தோன்றும்.

விருச்சிகம்

அதிகாலையிலேயே அதிர்ஷம் வந்து சேரும் நாள். அரைகுறையாக நின்றபணி மீதியும் தொடரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் ஏற்படும். பொது வாழ்வில் புகழ் கூடும்.

தனுசு

அதிக விரயங்கள் ஆட்கொள்ளும் நாள். எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம்.

மகரம்

பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர். உத்தியோக முயற்சி கைகூடும்.

கும்பம்

வரவும் – செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலனில் அக்கறை செல்லுத்துவீர்கள். கொடுத்த பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். அடிப்படை வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments