தித்திக்கும் திங்களில் உங்கள் ராசி பலன்கள்...!

Report Print Aravinth in ஜோதிடம்
மேஷம்

குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும் நாள். வழிபாட்டால் வளர்ச்சி ஏற்படும். சுபவிரயங்களை மேற்கொள்வதால் வீண் விரயங்கள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ஆலயவழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

மிதுனம்

காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்றுமருத்துவத்தை மேற்கொள்வீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். புதிய வியாபாரம் வளர்ச்சியைக் கொடுக்கும்.

கடகம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.

சிம்மம்

எதிர்கால வெற்றிக்கு அடித்தள மிடும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள். பெற்றோர் வழியில் அனுகூலம் உண்டு. பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்கள் வாங்க முற்படுவீர்கள்.

கன்னி

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிக்க உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். வழக்கில் வெற்றி கிட்டும்.

துலாம்

பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப்பெறும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வங்கிச் சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

பிரதோஷ வழிபாட்டால் பெருமை காண வேண்டிய நாள். வருமானம் இருமடங்காகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

சுபவிரயம் அதிகரிக்கும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் மாற்றங்கள் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும். மறக்க முடியாத சம்பவமொன்று மாலை நேரத்தில் நடைபெறும்.

மகரம்

லாபகரமான நாள். பலருடைய அன்பிற்கும் பாத்திரமாவீர்கள். திடீர் பணவரவால் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கல்மனம் படைத்த சிலரையும் சாமர்த்தியமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள்.

மீனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். கடுமையான எதிர்ப்புகள் கூட திடீரென சாதகமாகி விடும். முன்னோர் சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments