தமிழ் புத்தாண்டு ராசிபலன்: தனுசு ராசிக்காரர்களின் கவனத்திற்கு

Report Print Meenakshi in ஜோதிடம்
மூலம், பூராடம், உத்திராடம் 1

தனக்கென தனி முத்திரை பதிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

விட்டு கொடுத்து போங்க விடாமுயற்சி பண்ணுங்க! ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 10ம் இடத்தில் உள்ள குரு செப்.1ல் துலாம் ராசிக்கு மாறுகிறார். அங்கிருந்து 2018 பிப்.13-ல் குரு 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

ராசிக்கு 9-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜீலை 26-ல் 8-ம் இடமான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். ராசிக்கு 3-ம் இடத்தில் உள்ள கேது, ஜீலை 26-ல் 2-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார்.

தற்போது 12-ம் இடமான விருச்சிகத்தில் உள்ள சனி டிச.18-ல் உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த கிரகநிலைகளின் அடிப்படையில் பலனை காண்போம்.

ஏப்ரல் 14- ஜீலை 31

குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும். முயற்சியில் தடை குறுக்கிடலாம். பெரியோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உருவாகலாம்.

விட்டுக் கொடுத்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். சிலர் விரும்பாத இடமாற்றம் கிடைக்கப்பெறுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

வரவு செலவு கணக்கை சரியாக வைத்து கொள்வது நல்லது. கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் ஓரளவு முன்னேற்றம் காண்பர்.

விவசாயிகளுக்கு சுமாரான விளைச்சல் கிடைக்கும். கேதுவால் வழக்கு விவாகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. பெண்கள் குடும்பத்தோடு ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவர்.

ஆகஸ்ட் 1- 2018 ஜனவரி

குடும்பத்தினருக்காக எதிலும் விட்டு கொடுப்பது நன்மையளிக்கும். விடாமுயற்சி செய்தால், வசதியான் வீட்டுக்கு குடிபுக வாய்ப்புண்டு. சுபவிஷயத்தில் தடை குறுக்கிட்டு விலகும். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவால் ஓரளவு சலுகை கிடைக்கப்பெறுவர்.

தொழில், வியாபாரம் காரணமாக அடிக்கடி பயணம் மேற்கொள்ள நேரிடும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாரட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் காண்பர். விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்கள் மூலம் அதிக மகசூல் காண்பர். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர்.

2018 பிப்ரவரி 1-ஏப்ரல் 13

குடும்பத்தில் வீண்செலவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். வீடு, வாகனம் வாங்க கடன் வாங்க நேரிடும்.

பணியாளார்கள் சீரான வளர்ச்சி காண்பர். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால் நிர்வாக செலவு அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை கிடைக்காது.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.அரசியல்வாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பர். பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.

விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். பெண்களுக்கு தாய்வீட்டாடின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ராகுவுக்கு பாலபிஷேகம், பெருமாளுக்கு துளசி அர்ச்சனை. செல்ல வேண்டிய கோவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்.

- Dina Malar

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments