உங்க ராசி என்ன? இல்வாழ்க்கை அதிர்ஷ்டமாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள்

Report Print Printha in ஜோதிடம்
2481Shares
2481Shares
Seylon Bank Promotion

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதை போல சில தீய குணங்களும் உள்ளது.

அது என்னவென்று தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றது போல சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் அதிர்ஷ்டமான இல்வாழ்க்கை மற்றும் உறவுகள் அமையும்.

மேஷம்

மேஷம் ராசி உள்ளவர்கள் எப்போதும் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது என்ற விடயத்தை தெளிவாக அறிந்துக் கொண்டால், அவர்களின் வாழ்க்கை இனிமையாகும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் அகங்காரத்தை விடுத்து, அனைவரையும் நேசிக்க துவங்கினால், அவர்களின் இல்வாழ்க்கை மற்றும் உறவுகள் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் யாரை நேசிக்க விரும்புகிறீர்களோ அவர்களை மட்டும் நேசியுங்கள். உங்கள் தோற்றம் மற்றும் அழகிற்கு ஏற்ற பெண்ணை நேசிக்க விரும்ப வேண்டாம்.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் தேவைக்கு பழகும் நபர்களை விடுத்து, உங்கள் தேவைக்கு பழகும் நபர்களுடன் பழகினால், நீண்ட காலம் உறவுகள் நீடிக்கும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் எது உங்களுக்கு வேண்டுமோ அந்த செயல்களில் மட்டும் ஈடுபட்டால், அவர்களின் இல்வாழ்க்கை கச்சிதமாக அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் 100% சரியான நபராக இருக்க வேண்டும் என்ற தேடலை கைவிட்டால், அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு செயலுக்கும் துவக்கம் இருப்பது போன்றே முடிவும் இருக்கிறது என்னும் விடயத்தை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் தன்னை தானே விரும்ப துவங்கினால், அவர்களின் இல்வாழ்க்கை அருமையாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தோல்விகள் வரும் போது துவண்டு விடாமல், துணிவுடன் இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாகும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் ஒரே மாதிரியான ஆட்கள் இல்லை என்பதை நீங்களே வலுப்படுத்திக் கொள்வது அவர்களின் வாழ்க்கைக்கு சிறந்தது.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் உங்களை பற்றியே எண்ணிக் கொண்டிருக்காமல், மற்றவர்களை பற்றியும் மற்றவர்கள் பேசுவதையும் நன்றாக கேட்க வேண்டும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் அனைத்து விடயங்களிலும் தீவிரமாக இருக்காமல், மகிழ்வாக இருக்க கற்றுக் கொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்