உங்க ராசி இதுல இருக்கா? இந்த இரு ராசிகளின் கூட்டு இதற்கு ஒத்துப்போகாதாம்

Report Print Printha in ஜோதிடம்
1716Shares
1716Shares
lankasrimarket.com

திருமண பந்தம் என்று வரும் போது இருவேறுபட்ட இரண்டு ராசிகள் ஒன்றாக இணைவதால், நன்மை மற்றும் தீமை இரண்டுமே இருக்கும்.

அந்த வகையில் ஒருசில ராசிக்காரர்கள் ஒன்றிணைந்தால் முன்பின் முரணாகவும் இல்லற வாழ்க்கைக்கு ஒத்துப் போகாமலும் இருப்பார்கள்.

சிம்மம் மற்றும் கன்னி

இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒன்றிணைந்தால், இவர்களின் இடையே ஈர்ப்பு அதிகமாகும். இல்லறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சிம்ம ராசியின் ஆதிக்கம் அதிகரிப்பதால் இவர்களின் உறவில் மன உளைச்சல் அதிகமாகும்.

மேஷம் மற்றும் விருச்சிகம்

இந்த இரு ராசிகளும் பலம் மிக்கவர்கள், கட்டுப்பாடுடன் இருக்கக் கூடியவர்கள். தலைமை வகிக்க விரும்புவார்கள். இத்தகையவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லையெனில் இவர்களில் இல்லற உறவில் விரிசல்கள் ஏற்படும்.

ரிஷபம் மற்றும் கும்பம்

இந்த இரு ராசிகளும் இல்லற வாழ்க்கைக்கு பொருத்தம் இல்லாதவை. ரிஷபம் ராசிக்காரர்கள் காதல், அன்பு, அழகு, பொறுமை ஆகிய பண்புகளை கொண்டவர்கள்.

இவர்கள் விட்டுக் கொடுத்து வந்தாலும் கும்பம் ராசிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் இவர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும்.

மிதுனம் மற்றும் கடகம்

இந்த இரு ராசிக்காரர்களுமே சாந்தமான வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்கள். இருவருக்குமே நகைச்சுவை குணம் அதிகமாக இருக்கும். இவர்களில் இருவரும் அன்பை பகிர்ந்துக் கொண்டால் மட்டுமே இல்லற வாழ்க்கை சிறப்பாகும்.

தனுசு மற்றும் மகரம்

இந்த இரு ராசிக்காரர்களுக்கும் தாம்பத்தியம் பெரும் பிரச்சனையாக அமையும். இல்லறம் பற்றிய திட்டமிடலில் குழப்பங்கள் ஏற்படும். இந்த இரண்டையும் சரிசெய்துக் கொண்டால் இல்லறம் இனிமையாகும்.

கன்னி மற்றும் மிதுனம்

இவர்களுக்கு பணம் மட்டும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் மிதுனம் அன்பை மட்டும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கன்னி சேமிப்பிலே ஆர்வமாக இருப்பதால் இவர்களின் இல்லறத்தில் பிரச்சனை உண்டாகும்.

மீனம் மற்றும் சிம்மம்

இவ்விரு ராசிக்காரர்களும் ஆரம்பத்தில் மகிழ்வாக இருப்பார்கள். ஆனால் நாள் ஆக இவர்களது உறவில் பிரிவு ஏற்படும். ஏனெனில் சிம்ம ராசிக்காரரின் பேரார்வத்தை மீனம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் இவர்களின் உறவில் விரிசல் உண்டாகும்.

மிதுனம் மற்றும் விருச்சிகம்

இவர்கள் இருவருமே வெளிப்படையாக பேசிக் கொள்ள மாட்டார்கள். மனம் விட்டு பேசினால் இவர்களின் உறவில் ஒரு பற்று உண்டாகும். இல்லையெனில் இவர்களுக்கிடையே மன வருத்தம் அதிகரிக்கும்.

கும்பம் மற்றும் கடகம்

கும்பம் ராசிக்காரர்கள் எதிர்பார்ப்பதை கடகம் தரவில்லையெனில், இவர்களுக்கிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்டு இவர்களின் உறவு சீர்குலையும்.

துலாம் மற்றும் மீனம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் சிறிய விடயங்களுக்கு உண்டாகும் பிரச்சனையை கூட கையாள தெரியாமல் இருக்கும் பட்சத்தில் இவர்களின் உறவில் நாள்பட்ட விரிசல் ஏற்படும்.

சிம்மம் மற்றும் ரிஷபம்

இவர்கள் இருவரின் இடையில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கும். தங்கள் மீதே அதிக பெருமிதம் கொள்வார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் உறவில் விரிசல் உண்டாகும்.

மேஷம் மற்றும் கடகம்

இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ முடியும். ஏனெனில் இவர்கள் உணர்ச்சி ரீதியாக சிறந்து விளங்கக் கூடியவர்கள்.

ஆனால் இவர்களின் எண்ணங்கள் வேறுபடுவதால், சரியான புரிதல் உணர்வு இல்லாமல் இவர்களின் உறவில் விரிசல் அதிகரிக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்