பிறந்த மாதம் என்ன? உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது இதுதான்

Report Print Printha in ஜோதிடம்
2591Shares
2591Shares
lankasrimarket.com

ஒருவரின் பிறந்த மாதத்தை வைத்து அவர்களுக்கு எந்த எண் அதிர்ஷ்டத்தை கொடுக்கும், அவர்களுக்கான பலன்கள் எப்படி என்பதை பார்க்கலாம்.

ஜனவரி மற்றும் அக்டோபர்

ஜனவரி மற்றும் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண் 1 ஆகும். இவர்கள் ஏதேனும் ஒரு துறையில் நல்ல ஆராய்ச்சியாளராக வருவார்கள். இவர்களுக்கு மருத்துவ துறையில் அதிக பலன் கிடைக்காது.

ஆனால் இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றும் திறன் கொண்டவர்களாக திகழ்வார்கள்.

பிப்ரவரி மற்றும் நவம்பர்

பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண் 2 ஆகும். இவர்கள் சினிமா மற்றும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர்கள்.

கற்பனை வளம் அதிகம் கொண்டவரான இவர்கள், நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்படுவார்கள்.

மார்ச் மற்றும் டிசம்பர்

மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்களுக்கு மாத அதிர்ஷ்ட எண் 3 ஆகும். இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

இவர்களுக்கு நிர்வாகம், மருத்துவம், மார்க்கெட்டிங் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இவர்கள் யாருக்கும் பணிந்து செயல்பட மாட்டார்கள்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 4 ஆகும். இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். சொந்த தொழில் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்.

மிகவும் நம்பிக்கையாளராக திகழும் இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக் கூடியவராக இருப்பார்கள்.

மே

மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 5 ஆகும். இவர்களுக்கு கல்வி நன்றாக வரும். இவர்கள் அரசியல், நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீதிபதியாகவும் பணியாற்றுவார்கள்.

ஆனால் இவர்கள் எப்போதும் தனிமையை அதிகமாக விரும்புவார்கள்.

ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண் 6 ஆகும். இவர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண் 7 ஆகும். இவர்கள் கல்வி மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்கள்.

இம்மாதத்தில் பிறந்த சிலர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். அவசரம், வெறுப்பு உடையவர்கள். இவர்களை கண்டு பிறர் பயப்படுவார்கள்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 8 ஆகும். இவர்களுக்கு கல்வி சுமாராக அமையும்.

இவர்களுக்கு நண்பர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். இவர்கள் மிகவும் தனிமை பிரியர்கள். எதையும் தாமதமாகவே செய்வார்கள்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 9 ஆகும். இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். நிர்வாகத்துறை, நீதித்துறை, வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும்.

எதிலும் வெற்றி பெறக்கூடிய இவர்கள் அரிதான பல காரியங்களில் ஈடுபடுவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்