நவம்பர் மாத எண் ஜோதிட பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1, 10, 19, 28

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள்.

வீட்டை அழகுப்படுத்துவீர்கள். என்றாலும் சிறுசிறு விபத்து, அலைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், முன்கோபம், உறவினர் பகை வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கலைத்துறையினர்களே! போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள். விட்டுக் கொடுத்து வெற்றி பெறும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 10, 18
 • அதிஷ்ட எண்கள்: 7, 9
 • அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 • அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

2, 11, 20, 29

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிலும் வெற்றி கிட்டும்.

அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனுக்கு வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும்.

தாயாரின் உடல் நலம் சீராகும். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். புது நிலம், வீடு வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வக் கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

பிற்பகுதியில் நண்பர்களுடன் பகைமை வந்து நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உடல் வலி, வீண் டென்ஷன், அலைச்சல், திடீர் செலவுகள் வந்துப் போகும். வேற்றுமதத்தினரால் அனுகூலம் உண்டு. சாதுக்கள் உதவுவார்கள்.

அரசியல்வாதிகளே! மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

கன்னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.

கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 2, 7, 11, 20, 25
 • அதிஷ்ட எண்கள்: 2, 6
 • அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, இளஞ்சிவப்பு
 • அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

3, 12, 21, 30

ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.

ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். பழைய சொந்த-பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். என்றாலும் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உடல் நலம் பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் பழுதாகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சளித் தொந்தரவு வந்து நீங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.

கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்யாணம் முடியும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சு வேண்டாம்.

அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி கலந்து ஆலோசிப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். அந்தஸ்து உயரும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 1, 3, 10, 12, 27
 • அதிஷ்ட எண்கள்: 6, 8
 • அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 • அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

4, 13, 22, 31

ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள்.

சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

ஆனால் டென்ஷன், சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள் வந்து செல்லும். இனந்தெரியாத கவலைகள், விமர்சனங்கள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிக் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம். உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள்.

கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகிப்புத் தன்மையால் முன்னேறும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 4, 6, 15, 22, 24
 • அதிஷ்ட எண்கள்: 2, 7
 • இ, அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 • அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

5, 14, 23

ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்.

பேச்சில் முதிர்ச்சி தெரியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதைக் கூடும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும்.

அடகிலிருந்த நகையை மீட்டு புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புது வேலை அமையும். புது சொத்து வாங்குவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, வீண் சந்தேகம் வந்து விலகும்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர்.

அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். லாபம் பெருகும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார்.

கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். திடீர் யோகம் தரும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 5, 6, 15, 17, 24
 • அதிஷ்ட எண்கள்: 1, 3
 • அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 • அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

6, 15, 24

ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற சொத்து வாங்குவீர்கள். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள்.

அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். கண் மற்றும் பல் வலி வந்து நீங்கும்.

மனஇறுக்கம், தூக்கமின்மை, தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். கோவில் விழாவை முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்வியை தொடருவீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

கலைத்துறையினர்களே! உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 4, 6, 15, 24, 26
 • அதிஷ்ட எண்கள்: 4, 7
 • அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஆலிவ்பச்சை
 • அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

7, 16, 25

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். ஒரளவு பணவரவு உண்டு.

குடும்பத்தில் திருமணம் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சிலர் இருக்கும் வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். முன்கோபம், வாகன விபத்து, மனஉளைச்சல் வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள்.

வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டார் அன்பாக பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களை ஆதாரமின்றி விமர்சிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! புது வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கலைத்துறையினர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 2, 7, 15, 20, 25
 • அதிஷ்ட எண்கள்: 5, 8
 • அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, கிரே
 • அதிஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு

8, 17, 26

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அனுபவ அறிவால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும்.

வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கல்யாணம், காதுகுத்து என்று வீடு களை கட்டும். சொந்தம்-பந்தங்கள் மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவி கிடைக்கும். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்கு பதிலடி தருவீர்கள்.

அவ்வப்போது எதிலும் ஒருவித பயம், டென்ஷன் வந்துப் போகும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.

அரசியல்வாதிகளே! மேலிடத்தை அனுசரித்துப் போங்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வேலையாட்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்கள் உதவுவார்கள்.

கலைத்துறையினர்களே! மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உண்மையால் உயரும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 8, 14, 15, 17, 26
 • அதிஷ்ட எண்கள்: 3, 5
 • அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 • அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

9, 18, 27

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் திடீர் யோகம் உண்டாகும்.

நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். பல முறை முயன்றும் முடிக்க முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு.

மகளின் கூடா நட்பு விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.

மனைவிவழியில் நல்ல செய்திகள் வரும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மாதத்தின் மையப் பகுதியில் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு வாக்குறுதி அளித்துவிட்டு பிறகு அவதிபடவேண்டாம். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், சிறுசிறு விபத்துகள், அலைச்சல் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினர்களே! உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிகழும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்: 3, 6, 9, 10, 18
 • அதிஷ்ட எண்கள்: 2, 4
 • அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 • அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

- Web Dunia

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...