இந்த ராசிக்காரர்களிடம் இப்படி பேசினால்....?

Report Print Printha in ஜோதிடம்
404Shares
404Shares
lankasrimarket.com

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணநலன்கள் உண்டு. அதன்படி, எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்க முடியும் என்பதை இங்கு காணலாம்.

மேஷம்

மேஷம் ராசி உள்ளவர்களிடம் பேசும் போது கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேசுவது மிகவும் நல்லது. ஏனெனில் இவர்களுக்கு சட்டென்று கோபம் வருமாம்.

இவர்களிடம் இவரை பாராட்டி பேசலாம். ஆனால் வாக்குவாதம் மட்டும் இவர்களிடம் செய்யக் கூடாது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் அன்பாகவும், கனிவாகவும் நடந்துக் கொள்வார்கள். அதனால் இவர்ளிடம் அன்பாகவும், கனிவாகவும் பேசினால் காரியத்தை சாதிக்கலாம்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் அளவோடு பேச வேண்டும். அளவுக்கு மீறி பேசினால் அவர்களை அதிகமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

கடகம்

கடகம் ராசி உள்ளவர்கள் அன்பாகவும், அடக்கமாகவும் இருப்பார்கள். அதனல இவர்களிடம் மிகவும் பாசமாக பேசினால் இவர்களின் உதவியை பெறலாம்.

சிம்மம்

சிம்மம் ராசி உள்ளவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். அதனால் இவர்களிடம் பொறுமையாகவும், நேர்மையாகவும் நடந்துக் கொண்டால் நமக்கு தேவையான உதவிகளை இவர்களிடம் இருந்து எளிதில் பெறலாம்.

கன்னி

கன்னி ராசி உள்ளவர்களிடம் பழகும் போது அவர்களின் நட்பை முறித்துக் கொள்ள கூடாது. ஏனெனில் இவர்கள் மூலம் நிறைய ஆதாயங்களை பெறலாம். ஆனால் இவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கம்பீரமாக இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் ஜாலி, பொறுமை, அமைதி போன்ற குணங்களும் இவர்களிடம் இருக்கும். இவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி உள்ளவர்கள் பேசியே மயக்குவார்கள். இவர்களிடம் அன்பாக அனுசரித்து பேச வேண்டும். ஆனால் ஒருபோதும் கோபமாக பேசிவிடக் கூடாது.

தனுசு

தனுசு ராசி உள்ளவர்கள் மிகவும் பாசமானவர்கள், அன்பிற்கு அடிமையானவர்கள். அதனால் இவர்களிடம் அன்பாக பேசி எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் அதிகமாக புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அதனால் இவர்களை அதிகம் நம்பக் கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களிடம் ஒரு காரியத்தை சாதிப்பதே மிகவும் கஷ்டமான ஒன்று.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் பல விடயங்களை அறிந்திருப்பார்கள். அதை வெளிக்காட்டும் விதமாகவே பேசுவார்கள். அதனால் இவர்கள் கூறுவதற்கெல்லாம் சரி என்று சொன்னாலே போதும் இவர்களிடம் எளிதில் காரியத்தை சாதிக்கலாம்.

மீனம்

மீனம் ராசி உள்ளவர்கள் அனைவரை பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள். அதனால் இவர்களிடம் மிகவும் கவனமாக யோசித்து பேச வேண்டும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்