ஜோதிடப்படி குறைபாடுள்ள குழந்தை பெறும் அவயோகம் யாருக்கு?

Report Print Printha in ஜோதிடம்
291Shares

ஒருசில குழந்தைகள் பிறக்கும் போதே புத்தி கூர்மை இல்லாமை மற்றும் உடலில் ஏதேனும் சில குறைபாடுகளுடன் பிறக்கும்.

இவ்வாறு ஏதாவது ஒரு குறைபாடுடன் குழந்தை பிறந்தால் அது ஒருவித தோஷம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

யாருக்கு குறைபாடுள்ள குழந்தை பிறக்கும்?
  • ஜோதிட சாஸ்திர விதிப்படி, ஒருவரின் ஜாதகத்தில் மகரம், கும்பம், ரிஷபம் ஆகியவை லக்னமாக அமையப்பெற்று அந்த லக்னத்தில் அல்லது லக்னாதிபதியுடன் சனிபகவான் செவ்வாய் இணைந்து இருந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பெற்றாலோ அந்த குழந்தை ஏதேனும் குறைபாடோடு பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,5,9-ம் இல்லத்தில் திரிகோணஸ்தானம் பாபக்கிரகங்கள் அமையப்பெற்றால், அந்த ஜாதகர்கள் நிச்சயம் ஊனமுடைய குழந்தையை அடையப்பெறுவர் அல்லது புத்திர பாக்கியம் இருக்காது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
  • ஒருவரின் ஜனன ஜாதகத்தில் புத்திர தோஷத்திற்கான கிரகங்கள் அமைப்பு இருப்பினும் கர்மக் காரகனான செவ்வாய் அல்லது கர்மஸ்தானாதிபதியோ நல்ல பலம் பெற்று ஆட்சியாக அமையப்பெற்றால் அந்த ஜாதகர்கள் அவரது 42-45 வயதில் நிச்சயம் ஓரிரு கர்மபுத்திர பாக்கியம் அடையப்பெறுவர்.
  • ஒருவர் தமது முந்திய ஜன்மத்தில் அல்லது இந்த ஜன்மத்தில் செய்த பாவ, புண்ணியத்திற்கு தக்கவாறு சர்ப்பசாபம், ஸ்தீரி சாபம், கோ சாபம், மாதுர், பிதுர் சாபம், தெய்வசாபம் ஆகியவைகளில் ஏதாவது ஒன்று அல்லது பல அடையப் பெற்றிருப்பர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
  • ஒருவைன் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதி நின்ற ஸ்தானத்திற்கோ 5-ம் இல்லத்தில் சர்ப்பக்கிரகங்களாகிய ராகு, கேது அல்லது சனிபகவான் அமையப்பெற்றிருந்தால், அவர்களுக்கு புத்திர தோஷமாகும். அதனால் அவர்களுக்கு அதிக கருச்சிதைவு ஏற்படும்.
  • ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதியும், புத்திரஸ்தானாதிபதியும் இணைந்து ஒரு ராசியில் வீற்றிருக்க குருவின் பார்வை பெற்று அமையப் பெறுவதால் அந்த ஜாதகர் அதிகளவில் சற்புத்திரர்களை அடையப்பெறுவர்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்