அதிர்ஷ்டத்தை கூறுவது லக்ன பலனா? ராசி பலனா?

Report Print Printha in ஜோதிடம்
439Shares
439Shares
lankasrimarket.com

ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது உயிர் போன்றது. ராசி என்பது உடல் போன்றது. எனவே லக்னம் மற்றும் ராசி இவற்றில் முக்கியமானது லக்னமே.

ஏனெனில் லக்னம் தான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், ஒருவரின் முழு வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஆதாரத்தூண் போன்றது.

ஆனால் இந்த ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்பு மட்டும் தான்.

லக்னத்திற்கு இத்தனை சிறப்புகள் இருக்கும் போது, ராசிக்கு மட்டுமே அனைவரும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெரியுமா?

லக்னத்தை விட ராசி பலனை அதிகம் பார்ப்பது ஏன்?

பூமியின் சுழற்சி பாதையின் படி, எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ, அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.

ஏனெனில் லக்னமானது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள்.

ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பன்னிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது. அதுவும் ஒரு ராசியின் அளவு சுமாராக இரண்டே-கால் நாள் இருக்கும்.

ஆனால் லக்னம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருப்பதால், அன்றைய தினத்துக்கான பலனை கணிக்கும் போது ராசியை வைத்து பொதுபலனை கணிக்க முடியுமே தவிர, மாறிக்கொண்டே இருக்கும் லக்னத்திற்கான பலனை துல்லியமாக கணிக்க முடியாது.

எனவே தான் ராசியை வைத்து பலன்கள் கூறுகிறார்கள். ஆனாலும் அவை துல்லியமான பலன்கள் அல்ல.

ஏனெனில் லகனத்தையும் ராசியையும் இணைத்து தான் பலன் கூற முடியும். அதுதான் முறையான ஜோதிட பலன்களாக இருக்கும்.

ஜாதகருக்கு லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்கக் கூடியது. லக்னம்-ராசி ஆகிய இரண்டின் படி, ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் திசையில் கெடுபலன்கள் தான் நடக்கும் என்ற பலனை கூறி விடலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்