உங்க ராசி என்ன? இந்த நாளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமாம்

Report Print Printha in ஜோதிடம்
570Shares
570Shares
lankasrimarket.com

ஒவ்வொரு ராசிக்கும் எந்த கிழமை அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய்க் கிழமை அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் அவர்களுக்கு வெற்றிக் கிட்டும். அதுவும் மற்றவர்களிடம் தனது திறமையை வெளிக்காட்ட இந்நாள் மிகவும் சிறந்தது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெள்ளி, புதன், சனி மற்றும் திங்கள் ஆகிய கிழமைகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு புதன்கிழமை மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும். அதனால் இவர்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன் கிழமைகளில் மேற்கொண்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகள் இன்பம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். அதுவும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் தொடங்கும் செயலில் வெற்றி உண்டாகும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மிகவும் சிறந்த நாள். இந்நாளில் இவர்கள் தனது திறமையை முழுமையாக காணலாம். இந்நாளில் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் இவர்களுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன், வெள்ளி, திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ஆனால் இவர்கள் ஞாயிறு, செவ்வாய், சனி போன்ற தினங்களில் எந்த ஒரு முக்கியமான மற்றும் புதிய விடயத்தையும் மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் தோல்வியை சந்திக்கக்கூடும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வெள்ளிக் கிழமை அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்நாளில் இவர்கள் ராஜதந்திர மனோபாவம், நிறைய மக்களுடன் பழகினால் அதிக புகழை வாங்கித் தரும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகள் சிறப்பானவை. இந்நாளில் செய்யும் எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழன் கிழமை மிகவும் அதிர்ஷ்டமான நாள். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக புலப்படும். எனவே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை இந்நாளில் மேற்கொள்வது நல்லது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சனிக் கிழமை மிகவும் உகந்தது. இந்நாளில் இவர்கள் செய்ய நினைக்கும் செயல்களை மேற்கொண்டால், அவர் இதுவரை நினைத்திராத பலன் கிடைக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் போன்ற கிழமைகள் அதிர்ஷ்டமானவை. ஆனால் புதன், ஞாயிறு மற்றும் சனி ஆகிய கிழமைகள் அதிர்ஷ்டமற்றவை.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு வியாழன் கிழமை மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் புதிய முயற்சியை மேற்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்