பிறந்த நட்சத்திர பலன்கள்: இது பெண்களுக்கு மட்டும்

Report Print Printha in ஜோதிடம்

ஜோதிடத்தில் பெண்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவர்களின் பொதுவான குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

அசுவினி

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கவர்ச்சி, சுத்தம், கனிவு ஆகிய குணங்களை கொண்டவர்கள். கடவுள் பக்தி நிறந்த இவர்களுக்கு காதல் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.

பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆடம்பரம் அழகை விரும்ப மாட்டார்கள். நியாயத்திற்காக சண்டைகளை விரும்புவார்கள். ஆனால் இவர்கள் ஒருசில விடயங்களை மனதில் வைத்து தக்க நேரத்தில் உணர வைப்பார்கள்.

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கொள்கைப் பிடிப்பற்றவர். உரிமைக் கோபம் அதிகம் இருக்கும். நியாயத்திற்காக சண்டை போடுபவர்கள். நேர்மையற்ற சுற்றத்தை வெறுப்பவர்கள். யாரும் இவர்களை ஏமாற்ற முடியாது.

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் செல்வம் படைத்தவர்கள். அழகானவர்களாக திக்ழவார்கள். இவர்கள் வயது மூத்தவர்களை மதிக்க தெரிந்தவர்கள்.

மிருகசிரிடம்

மிருகசிரிடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுகாதாரமானவர்களாகவும், அழகானவர்களாகவும் திகழ்வார்கள். இவர்கள் ஆடை, ஆபரணம் யோகம் பெற்றவர்கள்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குரோத குணமும், நய வஞ்சகமும் இல்லாதவர்கள். ஆத்திரம் மிக்கவராக இருப்பதால் முகத்திற்கு முன் பேசிவிடும் குணத்தை கொண்டவர்கள்.

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பண்பானவர்கள், அடக்க மானவர்கள். இவர்கள் சுய கவுரவம் படைத்ததால், அழகு, லட்சணம் மிக்க கணவரைப் விரும்புவார்கள்.

பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். இவர்கள் தோற்றத்திலும் மிகவும் அழகானவர்களாக திகழ்வார்கள்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழுது சாதிப்பவர்கள். கோபத்தில் கடும் வார்த்தைகளை அள்ளி வீசுபவர் யாரையும் நம்பமட்டார்கள். ரகசியத்திஅ பாதுகாக்கத் தெரியாத வெளிப்படையானவர்கள்.

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சந்தோஷம், செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பார்கள். இவர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும் திகழ்வார்கள்.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மகிழ்சியை விரும்புவார்கள் இவர்கள் ஒழுக்கமானவர்கள். அதனால் தவறு செய்ய விரும்ப மாட்டார்கள்.

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். இவர்கள் நுண்கலை வல்லுநர்களாக திகழ்வார்கள்.

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அதனால் இவர்கள் அழகானவர்களாக தோற்றமளிப்பார்கள்.

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். இவர்கள் எதிர்ப்பை வெல்லும் குணத்தை கொண்டவர்கள்.

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்கள்.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவராக திகழ்வார்கள்.

கேட்டை

கோட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சத்திய நெறி காப்பவர்கள். இவர்கள் சந்தோஷமாக சுற்றத்தாரை நேசிப்பவராக இருப்பார்கள்.

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகாகவும், சுத்தமானவராகவும் இருப்பார்கள். ஆனால் அதிகம் கோபம் கொள்ளும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் பிடிக்காதவர்களிடம் அதிக வெறுப்பை காட்டுவார்கள்.

பூராடம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குடும்பத்தில் சிறந்தவராக திகழ்வார்கள். அதனால் இவர்கள் அதிகார அந்தஸ்து கொண்டவராக இருப்பார்கள்.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகளாக திகழ்வார்கள்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பிறருக்குச் சேவை செய்பவர்கள். மிகுந்த இரக்க குணம் கொண்ட இவர்கள் நம்பிக்கை, நேர்மை மிக்கவராக இருப்பார்கள்.

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். இவர்கள் பெருந்தன்மை, கருணை, நேர்மை ஆகிய குணங்களை கொண்டவர்கள்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். அனைவரிடமும் கலகலப்பாக பழகுவார்கள்.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். இவர்கள் கல்வி மற்றும் கலைகளில் வல்லவராக இருப்பார்கள்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பாசம், அறிவு ஆற்றல் மிக்கவர்கள். ஆனால் இவர்கள் உண்மையை மட்டுமே விரும்புவார்கள்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுத்து சம்பிரதாயங்களை மதிப்பவர்களாக திகழ்வார்கள். ஆனால் இவர்கள் நேசம் மிக்கவராக இருப்பார்கள்.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். இவர்கள் அனைவரிடமும் பாசம் காட்டும் நபராக திகழ்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்