டிசம்பர் மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

Report Print Printha in ஜோதிடம்

ஜோதிடத்தில் டிசம்பர் மாதத்திற்கு எந்த ராசியினருக்கு என்ன அதிர்ஷ்ட பலன்கள் உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்...

மேஷம்

மேஷம் ராசியினருக்கு இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். மாறுவதன் மூலம் அதை குருவுடன் இணைந்து ராசியை பார்க்கிறார்.

அதனால் இந்த ராசியினரின் மனதிடம் அதிகரிக்கும். அதேசமயம் அஷ்டமத்து சனி விலகுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கை கூடி வரும்.

பண வரவு நன்றாக இருக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது, பரிந்து பேசுவதில் அதிக கவனம் தேவை. தொழில், வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் அமையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த பூசல்கள் நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்

செவ்வாய் கிழமை அன்று விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது அனைத்து நன்மைகளையும் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - செவ்வாய், புதன், வெள்ளி.

அதிஷ்ட தினங்கள் - 9,10.

ரிஷபம்

ரிஷபம் ராசியினர் இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்ப்பதால், பணவரத்து திருப்தியை தரும். அதேவேளையில் சுபச்செலவுகள் அதிகமாகும்.

அஷ்டம சனி தொடங்குவதால், திடீர் கோபம் ஏற்பட்டு அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். அதனால் மிகவும் நிதானமாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பான விடயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் உள்ளவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுமாறு இருக்கலாம். அதனால் நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

மாணவர்களுக்கு நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்

தினமும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க அனைத்து செல்வங்களும் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - திங்கள், வெள்ளி.

அதிர்ஷ்ட தினங்கள் - 11,12,13.

மிதுனம்

மிதுனம் ராசியினருக்கு இந்த மாதம் கண்டச் சனி தொடங்குவதால் அதிக முயற்சிக்கு எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மைகள் உண்டாகும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். முடங்கி கிடந்த அனைத்து காரியங்களும் வேகம் பெறும்.

குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்

புதன் கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - புதன், வெள்ளி.

அதிர்ஷ்ட தினங்கள் - 14, 15.

கடகம்

கடகம் ராசியினருக்கு இந்த மாதம் ராகு சஞ்சாரம் செய்கிறார். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு கட்டும் பணிகள் நிறைவடையும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் வேகம் பிடிக்கும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளை பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்

திங்கள் கிழமை அம்மனை தரிசித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மன குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - ஞாயிறு, திங்கள், வியாழன்.

அதிர்ஷ்ட தினங்கள் - 16, 17, 18.

சிம்மம்

சிம்மம் ராசியினருக்கு இந்த மாதம் அர்த்தாஷ்டம சனி விலகுவதால் மிக நல்ல பலன் கிடைக்கும். எந்தவொரு விடயத்திலும் முயற்சிகளினால் உடனடியாக பலனை காணலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். ஆனால் அதிக லாபம் வந்து சேரும். உத்தியோகக்காரர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. எந்த விடயத்தையும் கணவன் மனைவிக்கிடையே திட்டமிட்டௌ செய்வது நன்மை தரும்.

மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்

தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - ஞாயிறு, வியாழன்.

அதிர்ஷ்ட தினங்கள் - 19, 20.

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த மாதம் முயற்சி செய்யும் அனைத்து விடயங்களிலும் வெற்றியை தரும்.பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றது போல இருக்கும். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். பதவி, உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்விக்கான செலவு அதிகரிக்கும். சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்

துளிஸியை ஐயப்பனுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - திங்கள், புதன், வியாழன்.

அதிர்ஷ்ட தினங்கள் - 21, 22.

துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஏழரை சனி முடிவதால் பல நன்மைகள் உண்டாகும்.

கோபம் மறைந்து நிதானம் அதிகரிக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகி, மன நிறைவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பின் கடினமான காரியம் கைகூடும்.

குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான தடைகள் அகலும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

பரிகாரம்

வெள்ளிக் கிழமையில் பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடக்கும். பணவரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - வியாழன், வெள்ளி.

அதிர்ஷ்ட தினங்கள் - 23, 24, 25.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த மாதம் சனி தனஸ்தானத்திற்கு மாறுகிறார். அதனால் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். அனைவரிடத்திலும் மதிப்பு மரியாதை கூடும்.

தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் மூலம் நன்மை உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி, மன நிம்மதி இருக்கும். உறவினர், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்கள் போட்டிகளில் துணிச்சலுடன் ஈடுபட்டால் அவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். படிப்பில் ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்

செவ்வாய் கிழமை அன்று மாரியம்மனை வணங்கி தீபம் ஏற்றி வழிபட அனைத்து பிரச்சனைகளும், மனக்கவலைகளும் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - ஞாயிறு, புதன், வெள்ளி.

அதிர்ஷ்ட தினங்கள் - 26, 27.

தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த மாதம் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது. ஆனால் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த தாமதம் நீங்கும்.

தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகி ஆறுதலை தரும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி உண்டாக அனுசரித்து செல்வது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சலிப்பு காட்டாமல் இருப்பது நல்ல பலனை தரும்.

பரிகாரம்

வியாழன் கிழமை அன்று சித்தர்களை வணங்க மன அமைதி உண்டாகும், காரியங்கள் வெற்றி அடையும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - திங்கள், வெள்ளி, வியாழன்.

அதிர்ஷ்ட தினங்கள் - 1. 2, 28, 29.

மகரம்

மகரம் ராசியினருக்கு இந்த மாதம் சனி விரையஸ்தானத்திற்கு வருகிறார். அதனால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். இதன் தொடர்பான பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் நன்மை கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படியான வருமானம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்

துர்க்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - திங்கள், வெள்ளி.

அதிர்ஷ்ட தினங்கள் - 3, 4, 30, 31.

கும்பம்

கும்பம் ராசியினருக்கு இந்த மாதம் அடுத்தவர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். சுப செலவுகள் மற்றும் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவது சற்று தாமதம் ஆகலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீண் வாக்குவாதங்கள் அகலும். கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது.

மாணவர்கள் கல்வி பற்றிய கவலைகளை தவிர்த்து கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

பரிகாரம்

சனிக் கிழமை அன்று சனி பகவானுக்கு எள் சாதமும், நைவேத்தியம் படைத்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள் - ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட தினங்கள் - 5, 6.

மீனம்

மீனம் ராசியினருக்கு இந்த மாதம் ராசிநாதன் குரு அஷ்டமஸ்தானத்தில் மறைந்தாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு உதவி புரியும் வகையில் சஞ்சாரம் செய்கிறார்.

அதனால் செலவுகள் குறையும், பணவரத்து அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் உள்ளவர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்

அதிர்ஷ்ட கிழமைகள் - செவ்வாய், வியாழன், வெள்ளி.

அதிர்ஷ்ட தினங்கள் - 7, 8.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்