சனி சர்ச்சையை குறைக்க: எந்த ராசிக்காரர் எந்த கோவிலுக்கு போகலாம்

Report Print Printha in ஜோதிடம்
316Shares
316Shares
ibctamil.com

சனி பகவானின் சச்சரவுகள் குறைய எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு சென்றால் அதன் தீவிரத்தை குறைக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில், ஸ்ரீவிநாயகர், குல தெய்வம், ஸ்ரீபெருமாள் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் விழுப்புரத்தில் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம், ஸ்ரீசிவன், இஷ்ட தெய்வம், ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆகிய கடவுளை தினமும் வணங்கி வர வேண்டும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் கோவையில் காரமடை அமைந்துள்ள சுயம்பு பெருமாள் கோவில், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகிய கோவிலுக்கு சென்று வணங்க நல்ல பலனை பெறலாம்.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் அலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான், சிவபெருமான் மற்றும் அம்பாளை வணங்கி வந்தால் சிறப்பான பலனை பெறலாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளை பெறலாம். திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் வாழ்க்கை மேன்மையுறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நாகரத்தினசுவாமி திருக்கோவிலுக்கு சென்று நாகேஸ்வர சுவாமியை வழிபட்டால் நல்ல பலன்களை பெறலாம். மேலும் பெருமாள், பைரவர், சனீஸ்வர பகவானை தினமும் வழிபடலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வணங்கி வரலாம். மேலும் இவர்கள் சனீஸ்வரர், சிவபெருமான் மற்றும் அம்பாளை வணங்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், அபிராமியை வணங்கி வந்தால் சிறப்பான பலன்களை பெறலாம். மேலும் சனி பகவான், பார்வதி, ஆகியோரையும் வழிபடலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சனிஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வர சிறப்பான பலனை பெறலாம். மேலும் ஆஞ்சநேயர், சனீஸ்வரர் பகவான், ஆகியோரை தினமும் வழிபடலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலனை பெறலாம். மேலும் நவக்கிரகம், ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபடுவது மிகவும் நல்லது.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் கள்ளிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஆதிவராக பெருமாளை வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம். மேலும் சிவன், பார்வதி, ஆகியோரை தினமும் வழிபடுவது நல்லது.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால் சிறப்பான பலனை பெறலாம். மேலும் விநாயகர், சனீஸ்வரர் பகவானை தினமும் வழிபட்டு வந்தால் நல்லது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்