நிகழ்ந்த சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு 100 சதவீதம் யோகம்?

Report Print Kabilan in ஜோதிடம்
2184Shares
2184Shares
ibctamil.com

2017-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த டிசம்பர் 19-ம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இடம்பெயர்ந்தார்.

இனி தனுசு ராசியில் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்க உள்ளார். தனுசு ராசிக்கு வந்த சனிபகவான் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி – 28.03.2020 – சனிக்கிழமையன்று மாறுகிறார்.

தனுசு ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் கும்ப ராசியையும் – ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் – பத்தாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம். நடந்துமுடிந்த சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு அதிக நன்மையையும், யோகத்தையும் அளிக்கப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் – கடகம் – சிம்மம் – துலாம் ஆகிய நான்கு ராசிகள் அதிக நன்மையை பெறப் போகிறார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கிட்டத்தட்ட 5 வருட காலகட்டம் உங்கள் வாழ்வில் மிகவும் போராட்டமாக இருந்து வந்தது. இப்போது பாக்கியஸ்தானத்தில் குருபகவான் மாறியுள்ளார். இதனால், அளப்பறிய நன்மைகள் அள்ளி வழங்கப்போகிறார். பொதுவாக ஜென்ம சனி முடிந்து 10 வருட காலத்திற்கு எந்த பாதகமும் இன்றி நன்மைகள் நடைபெறும். தேங்கியிருந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலைப் பொறுத்தவரை கைநிறைய சம்பளத்துடன் வேலைக் கிடைக்கும். வெளிநாடு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சகோத சகோதரிகளுடன் பேசும் போது கவனம் தேவை. உடல்நிலை மற்றும் முதலீடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து செவ்வரளி மலர்களை முருகனுக்கு சாத்தி வரலாம்.

கடகம்

கடகம் ராசி அன்பர்கள் இதுவரை பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் ரன ருன ஸ்தானத்திற்கு மாறி இருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியானது கிட்டதட்ட அடுத்த 18 வருட காலகட்டத்திற்கு பிறகு பொன்னான பலன்களை தரக்கூடிய அருமையான அமைப்பில் நீங்கள் இருக்கிறீர்கள். எல்லாக் கிரகங்களுமே அனுகூலம் தரக்கூடியதாக உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள்.

10 மாதத்திற்குப் பிறகு குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வர உள்ளதால் இன்னும் சிறப்பாக இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்குவதற்கும் இது ஒரு பொன்னான காலகட்டமாக அமையும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களைக் கொடுக்கும். ஆரோக்கியம் தொடர்பான குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்: அபிராமி அந்தாதி தினமும் படித்து வரலாம். செவ்வாய்க்கிழமையில் அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவது நல்ல பலன்களை கொடுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்போது நடக்கும் என்ற அளவுக்கு மிகக் கடுமையான மனஉளைச்சல். எந்த விஷயத்தை எடுத்தாலும் நடக்கவே நடக்காது. இல்லையெனில் கடைசி நிமிடத்தில் கைவிட்டு போகும். ராகுவின் சஞ்சாரம் 1 1/.2 வருடம் இல்லாமல், அர்த்தஷ்டம சனி வேறு….மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி என்ற அளவுக்கு 2 1/2 வருடம் இருந்துவந்தது.

இந்த நிலை மாறி இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை உங்களுக்கு வழங்கப்போகிறது. பெற்றோர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள், வாழ்க்கைத்துணை என அனைவரும் உங்கள் பக்கம் ஆதரவாக இருப்பார்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட கால போராட்டத்துக்குப் பின்னர் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நிகழும்.

பரிகாரம்: ஆதித்த ஹிருதயம் படித்து வாருங்கள். பிரதோஷ காலத்தில் சிவன் கோயிலுக்கு சென்று வரலாம்.

துலாம்

துலா ராசிக்காரர்களே கிட்டத்தட்ட ஏழரை வருடம் போதும்டா சாமி என்ற அளவுக்கு மிகப்பெரிய கஷ்டங்களை அனுபவித்தீர்கள். இனி அதற்கெல்லாம் அறுவடை செய்யும் காலமாக இது அமையும். மனதில் இருந்துவந்த இனம்புரியாத கவலைகள் எல்லாம் மறையும்.

சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நீங்கள் திட்டமிட்டபடி அமையும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவார்கள். அந்தஸ்து உயரும். புதிய முயற்சிகள் அனைத்தும் 100 சதவீதம் வெற்றியைக் கொடுக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அனைத்து விஷயத்திலும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் காலகட்டமாக இது உங்களுக்கு அமையும்.

பரிகாரம்: அபிராமி அந்தாதி தினமும் பாராயணம் செய்து வரலாம். அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவது நல்ல பலன்களை கொடுக்கும்.

- Dina Mani

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்