2018 எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது?

Report Print Kabilan in ஜோதிடம்
2071Shares
2071Shares
ibctamil.com

2018-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது, என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு அனைத்துப் பலன்களும் நல்லதாகவே இருக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

பரிகாரம்

‘நாடி வந்து உதவி கேட்பவர்களுக்கு, தன்னால் ஆன உதவிகளை மனதார செய்து வந்தால்’ ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் அஷ்டம சனியின் பிடியில் இருப்பதால், இவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும். ஆனால், இவர்கள் எந்தவித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பார்கள்.

பரிகாரம்

‘சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்கும் அறப்பணிகளுக்கு உதவி வந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அதைச் சரிசெய்து நேர்மறை சிந்தனையால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். இந்த ராசிக்காரர்களில் சிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள்.

பரிகாரம்

‘நலிவடைந்த குடும்பத்துக்குத் தேவையான பலசரக்குப் பொருட்களை, மாதாமாதம் வாங்கித் தந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நிறையச் சவால்களும், சில புதிய திருப்பங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், இவர்களின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கும்.

பரிகாரம்

‘வயதானவர்களுக்கு வேண்டிய உபகாரங்களை, நேரம் காலம் பாராமல் தொடர்ந்து செய்துவந்தால்’ ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆண்டு புனித யாத்திரையை மேற்கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்

‘வாழ வழி தேடி, சாலைகளில், அங்கும் இங்கும் அல்லாடி சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் எளியோருக்கு, உணவும் உடையும் வழங்கி வந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அவ்வப்பொழுது வரும் பிரச்னைகளை தவிர்த்து இந்த வருடம் பிரமாதமாக இருக்கும். இவர்கள் தன லாபத்தைப் பெற வாய்ப்புண்டு.

பரிகாரம்

‘வாழ்வில் நலிவடைந்தோருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைத் தொடர்ந்து செய்துவருவது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சில விஷயங்கள் வெற்றி அளிக்கவில்லை எனினும், ஒட்டுமொத்தமாக இந்த வருடம் முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களின் கோபத்தால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரம்

‘வாயில்லா ஜீவன்களுக்கு, தினமும் வயிறார உணவளித்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும் மறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கெடு பலன்கள் அதிகம் உள்ளது. பண தட்டுப்பாடு, வீண் விரயம், போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும்.

பரிகாரம்

‘வழிபாட்டு ஸ்தலங்களில் உழவாரப் பணிகளை உளமார செய்துவருவது நன்மை பயக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மேன்மேலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் வரும். பணவரவு இருந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் சிறு சிறு பிரச்னைகள் உருவாகும்.

பரிகாரம்

‘ஈம காரியங்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பலவிதமான அனுபவங்களைச் சந்திப்பார்கள். இவர்களுக்கு உடல் ஆரோக்கியக் குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் தொல்லைகளைக் கொடுக்கலாம்.

பரிகாரம்

‘வசதியில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து செய்துவந்தால்’, ஏழரைசனியின் விரயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அனைத்து விதத்திலும் சிறந்ததாக இருக்கும். இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்பதிலும் முழு கவனம் செலுத்துவார்கள்.

பரிகாரம்

‘பால்வாடி அங்கன்வாடி குழந்தைகளுக்குப் பால் பழங்களையும், காய்கறிகளையும் தினமும் தவறாமல் வழங்கிவந்தால் வாழ்வில் மேலும் முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சோதனைகளும், சாதனைகளும் கலந்து வரும். மேலும், இவர்கள் வருடம் முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

பரிகாரம்

‘கர்மவினையால் கடன்பட்டவர்களுக்கு உபகாரமாக இருந்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும் பனிபோல மறையும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்