நீங்க எந்த மாதத்தில் பிறந்தீங்க! உங்களது குணம் இதுதானாம்

Report Print Kavitha in ஜோதிடம்
908Shares
908Shares
ibctamil.com

இந்த ஆண்டு எந்தெந்த மாதங்களில் பிறந்த பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போம்.

ஜனவரி

ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் உள்ளவர்களாகவும், லட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

எந்த ஒரு விடயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள்.

இவர்களை போன்றே இருக்கும் நபர்களுடன் தான் அதிகம் பழகுவார்கள்.

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள்.

இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது.

அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது.

இவர்களுடைய மூட் அடிக்கடி மாறும்.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்களுக்கு வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள்.

மிக நேர்மையானவர்களாக, ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள்.

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரிகள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள்.

சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். இது அவ்வப்போது வெடிக்கும்.

தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து காட்டுவார்கள்.

மே

மே மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறுதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள்.

இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனிக் கோட்பாடுகள் இருக்கும்.

ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது.

இவர்கள் காதலில் விழுவதும் கடினம். இவர்களை அவ்வளவு எளிதாக மறக்கவும் முடியாது.

யூன்

யூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள்.

கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.

நீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள்.

ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.

யூலை

யூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை.

மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள்.

அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள்.

இவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி. மீண்டும் இணைய மாட்டார்கள்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள், தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

நல்ல உள்ளம் கொண்டிருப்பார்கள்.

இவர்களுடன் மோத நினைக்க வேண்டாம். இவர்கள் உங்களை கண்டிப்பாக வென்றுவிடுவார்கள்.

இவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள்.

இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது.

ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவர்.

அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும்.

உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.

தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்.

பொய்களை வேகமாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

உண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மை மட்டுமே கேட்க விரும்புவார்கள்.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. ஆனால் இவர்கள் லக்கியான நபர்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள்.

திறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்