இதில் 2 விதிகள் பொருந்துகிறதா? உங்களுக்கு பலதார திருமண யோகம் நிச்சயம்

Report Print Printha in ஜோதிடம்
627Shares
627Shares
lankasrimarket.com

திருமண வகைகளில் பல வகை உண்டு. அவைகளில் ஒரே தாரம், பல தாரம் போன்ற திருமண வகைகளை நாம் அறிந்ததே.

ஜோதிடத்தின் படி யாருக்கு பலதார திருமணங்கள் செய்யும் அமைப்பு உள்ளது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்..

ஜோதிட ரீதியாக பலதார திருமணங்கள்

பொதுவாக ஜாதகத்தில் திருமணத்தைக் குறிப்பிடுவது ஏழாமிடம் எனும் களத்திர ஸ்தானம் ஆகும்.

இந்த களத்திர ஸ்தானத்தின் அதிபதியைக் கொண்டு ஒருவரின் திருமண வாழ்க்கையைத் தீர்மானிக்கலாம் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

அதாவது ஒரு ஆண் அல்லது பெண் இணைந்து வாழும் தன்மையைக் கூறுவது ஏழாம் பாவமாகும்.

என்றாலும் ஒருவரின் குடும்ப வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் ஏழாம் பாவத்தினை மட்டும் கொண்டு அறிய முடியாது. எனவே 2-ம் பாவத்தினை கொண்டும் குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் புதிய நபர் சேர்வது ஆகியவற்றைப் பற்றியும் கணவன் அல்லது மனைவியால் அடையும் சுகத்தை 11-ம் பாவத்தைக் கொண்டும் அறியலாம் என்கிறது ஜோதிடம்.

ஆனால் ஒருவருடைய ஏழாம் பாவம் சுத்தமாக அதாவது கிரகங்கள் இன்றி இருப்பது நல்லது.

7-ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருப்பது திருமண வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்தும். இது திருமணத்திற்கு மட்டுமே பொருந்தும். மற்ற விடயங்களுக்கு மாறுபடும்.

பலதார திருமணங்கள் நடைபெறும் ஜாதக அமைப்பு?

  • ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய 2-ம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும்7-ம் வீட்டின் அதிபதிகள் உச்சம் பெறுவது மற்றும் செவ்வாய், ராகு சேர்க்கை பெறுவது மற்றும் 7-ம் வீட்டை உச்சம் பெற்ற கிரகங்கள் பார்ப்பது.

  • இரண்டாம் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ எந்த ஒரு கிரகங்களாவது உச்சம் பெற்று நின்று செவ்வாய், ராகு தொடர்பு பெறுவது.

  • ஒருவருடையை ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய 2-ம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் நீசம், வக்ரம் பெற்றும் நின்று அசுபர்கள் தொடர்பு பெறுவது.

  • ஒருவருடையை ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையும் திருமணத்தின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.

  • பொதுவாக பல திருமணங்கள் செய்து கொண்டவர்களின் ஜாதகங்களை பார்க்கும் போது செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம், மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாம் 7-ம் பாவமாக அமைந்த ஜாதகங்களில் அதிகளவு இந்த அமைப்பு காணப்படுகிறது.

  • ஏழாம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் உச்சமாகி நின்றாலும் பலரை மணக்கும் அமைப்பு ஏற்படுகிறது.

  • 7-ம் வீட்டில் ஒன்றிற்கு மேல் அசுப கிரகங்கள் நின்றாலும் பலதார அமைப்பை ஏற்படுத்துகிறது.

  • ஏழாம் வீட்டதிபதி உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் நிற்பது.

  • ஏழாம் வீட்டில் சந்திரன் நிற்பது, ஏழாம் வீட்டதிபதி பாப கர்த்தாரி யோகம் பெறுவது ஆகியவையும் பலதார திருமணத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்.

  • சுக்கிரன் இரட்டை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த அதிபதி உச்சமானால் பலரை மணக்கும் அமைப்பு ஏற்படுகிறது.

குறிப்பு

மேலே கூறப்பட்டுள்ளவை போன்று எத்தனை விதிகள் இருந்தாலும், அனேகமாக இந்த விதிகளில் குறைந்தது இரண்டு விதிகள் இருந்தாலே அவர்களுக்கு பல தார யோகம் அமைந்து விடுகிறது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்