இந்த 9 ராசிக்காரர்களுமே இப்படிபட்டவர்களாம்...? உங்க ராசி இதுல இருக்கா?

Report Print Printha in ஜோதிடம்
1398Shares
1398Shares
lankasrimarket.com

ஜோதிடத்தில் உள்ள ராசிகளின் படி ஒவ்வொருவரின் குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவற்றை கணிக்க முடியும்.

அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் அதிக பேராசைக் கொண்டவர்கள். அத்தகைய ராசிகளின் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது என்பதை பற்றி காணலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவார்கள். இந்த ராசிக்குரியவர்கள் உலகில் உள்ள அனைத்து விதமான ஆரம்பரமான பொருட்களை வாங்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.

இந்த ராசிக்காரர்களின் குடும்பத்திற்கு பணம் தேவைப்படும் போது, அதை போதுமான அளவு கொடுக்க தாராள மனம் கொண்டிருந்தாலும், வாழ்வின் மீதுள்ள அவர்களது பேராசை வெளிப்படுமாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி அதிகம் கஷ்டப்படாமல் பணத்தை சம்பாதிப்பது என்று நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.

இருப்பினும், பணம் என்று வரும் போது இந்த ராசிக்காரர்கள் யாருடனும் அதை பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். கன்னி ராசி பெண்களை விட கன்னி ராசி ஆண்கள் தான் அதிக பேராசைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினர் யாரேனும் உதவி என்று கேட்டால் அல்லது ஏதேனும் பொருட்களை வாங்க விரும்பினால், அதை தாராளமாக செய்பவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதை விட, பணத்தை தங்களது வங்கிக் கணக்கில் போட்டு சேமிப்பது என்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பணம் இருந்தால் பாதுகாப்பாக இருப்பதை உணர்வார்கள். ஏனெனில் அது அவர்களது தன்னம்பிக்கையை அளிப்பதோடு, எதிர்பாராத நிதி பிரச்சனை வந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

இந்த ராசிக்காரர்கள் செலவு என்று வரும் போது எப்போதும் பணத்தை, தங்கள் விருப்பமானவர்களிடம் இருந்து தான் வாங்கிக் கொள்வார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ராஜாக்கள் போன்று நல்ல ஆடம்பரமாகவும் மற்றும் கையில் நிறைய பணத்துடனும் இருக்க விரும்புவார்கள்.

இந்த ராசிக்காரர்கள் நல்ல தொழிலதிபர்கள் மற்றும் நல்ல ஆரம்பரமான வாழ்க்கை முறையை வாழ எப்படி நிறைய பணம் சம்பாதிப்பது என்று நன்கு தெரிந்தவர்கள்.

ஆனால் நிதி அடிப்படையில் மற்றவர்களுக்கு உதவுவது என்று வரும் போது அவர்கள் கஞ்சம் செய்வார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அதிக பேராசை கொண்டவர்கள் இல்லாவிட்டாலும், இவர்கள் மிகவும் தந்திரமான விற்பனையாளர்களாக இருப்பார்கள்.

இந்த ராசிக்காரர்களது மார்கெட்டிங் திறமையால், அவர்கள எப்பேற்பட்ட மலிவான பொருட்களையும் தந்திரமாக விற்று விடுவார்கள்.

அதே சமயம் இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை எப்படி, எங்கு முதலீடு செய்வது என்று தெரியாது. அதற்கு இவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் விளைவுகளைப் பற்றி முன்பே சிந்திக்காமல் இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்க விரும்ப மாட்டார்கள். இவர்களது ஆசையே வித்தியாசமாக இருக்கும் மற்றும் இவர்கள் தங்களது இலக்குகளை அடைய வேண்டுமென்ற உறுதியான தீர்மானம், இவர்களது பணத்தை சேமிக்க உதவும்.

இந்த ராசிக்காரர்கள் யாரிடமாவது பணத்தைக் கேட்கும் போது, கொடுக்காமல் தவிர்த்தால், அடுத்த முறை அவர்கள் தன்னிடம் பணம் கேட்டு வந்தால், மறக்காமல் அதைச் சொல்லிக் காட்டுவார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சௌகரியமான வாழ்க்கையை வாழ நிறைய பணம் தேவையாக இருக்கும். இவர்கள் ஆரம்பரமான மற்றும் சௌகரியமான வாழ்க்கையை வாழ அதிக பணத்தையும் செலவு செய்வார்கள்.

இந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது பேராசைக் கொண்டவர்கள் அல்ல. இருப்பினும் இவர்கள் எப்போதும் சௌகரியமான வாழ்க்கையையே வாழ விரும்புவார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எதிலும் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்களின் குணத்தால், இவர்களால் அதிக பணத்தை சேமிக்க முடியாமல் போகும்.

இந்த ராசிக்காரர்களிடம் யாரேனும் பணம் கேட்டு வந்தாலோ மற்றும் உதவி கேட்டு வந்தாலோ, அதை நினைத்து இவர்கள் பெருமை கொள்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்