குளிச்சதுமே முதல்ல எந்த உடல் பாகத்த துவட்டுவீங்க? உங்கள் குணநலங்கள் இதோ

Report Print Arbin Arbin in ஜோதிடம்
690Shares
690Shares
ibctamil.com

நீங்கள் குளித்து முடித்தவுடன் முதலில் துவட்டும் உடல் பாகத்தை வைத்தும் ஒருவரது பொதுவான குணாதிசயங்கள் குறித்து அறிய முடியுமாம்...

இந்த பொது குணாதிசயங்களின் வெளிப்பாடு என்பது வெறும் கணிப்புகளே தவிர, நூறு சதவிதம் இப்படி தான் இருப்பார் என்று ஊர்ஜிதமாக சொல்லப்படுபவை அல்ல.

தலைமுடி:

நீங்கள் எதையும் லாஜிக், பிராக்டிகல் பார்த்து செய்பவராக இருக்கலாம். கொடுத்த / செய்யும் வேலையை பிசிறு இல்லாமல் சிரத்தையுடன் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள்.

காதுகள்:

இவர்கள் அறிவாற்றல் நிறைந்திருப்பவராக கருதிக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் அப்படி இருக்க மாட்டார்கள்.

சில சமயம் தங்கள் மனதில் எழும் எண்ணத்தைக் கொண்டு அதை பின்பற்றினால் சாதித்துவிடுவோம் என்று கருதுவார்கள். ஆனால், இவர்களாக முடிவெடுக்கும் விஷயங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிய வாய்ப்புகள் உண்டு.

முகம்:

இவர்களிடம் தலைமை தாங்கும் குணம் இருக்கும். எதையும் முன்னின்றி செயற்படுத்துவார்கள். தோல்விக்கு காரணம் தாங்கள் என்றாலும், அதை தைரியமாக ஒப்புக் கொள்வார்கள்.

தங்கள் வேலையில் மட்டுமின்றி, மற்றவர் வேலைகளிலும் அதிக செயற்பாடு காட்டுவார்கள். இவர்களது ஆக்ரோஷ குணம், இவர்களை தனிக்கவனம் பெற செய்யும்.

கழுத்து:

இவர்களிடம் தைரியம் குறைவாக இருக்கும். அதிகமாக அச்சப்படுவார்கள்., எதற்கும் தயங்குவார்கள்.

இவர்கள் எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு யாராவது ஆலோசனை வழங்க வேண்டும். எந்த செயலாக இருந்தாலும், தங்களுக்கு எதிராக யாரோ சதி செய்கிறார்கள். அதனால் தான் தங்களுக்கு இப்படி நடக்கிறது என்று கருதுவார்கள்.

மார்பு:

இவர்கள் இயற்கையாகவே இனிமையாக, ஊக்குவிக்கும் குணம் கொண்ட நபராக இருப்பார்கள். அதே சமயம் மற்றவர்களிடம் எளிதாக ஏமாறக் கூடிய நபராகவும் இருப்பார்கள்.

யாருக்காவது உதவி வேண்டும் என அறிந்தால், முதல் ஆளாக ஓடிப் போய் நிற்பார்கள். முடிந்த வரை சிரித்த முகத்துடனே சூழல்களை எதிர்கொள்வார்கள்.

வயிறு:

இவர்களிடம் பேராசை குணம் அதிகம் இருக்கும். நெருக்கமாக பழகுவார்கள். ஒரே நொடியில் ஏதேனும் ஜோக்கடித்து சிரிக்க வைத்துவிடுவார்கள். தாங்கள் செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குள் அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டம் மூலமாக தாங்கள் பணக்காரர் ஆகவேண்டும் என்று கருதுவார்கள்.

தோள்கள்:

தங்களிடம் இருக்கும் நற்குணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் குணம் கொண்டிருப்பார்கள்.

ஆனால், மற்றவர்கள் அதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள மாட்டார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதுமே இவர்கள் ஒரு புதிர் தான்.

தங்களுக்கு நல்லதை நினைக்கும் மக்களுக்கு எப்போதும் நேர்மையுடன் நடந்துக் கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும்.

முதுகு:

இவர்களிடம் கற்பனை மற்றும் கிரியேடிவ் திறன் அதிகம் இருக்கும். இவர்களிடம் மற்றவர் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் குணம் காணப்படும்.

தன்னுடன் உடன் இருப்பவரின் வளர்ச்சிக்கு இவர்களே சிலசமயம் தடையாக மாறுவார்கள். இவர்களை நம்பகத்தன்மை கொண்டு பழகுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

கால்கள்:

பழகுவதற்கு சிறந்த மனிதர்கள். புத்திக்கூர்மை வாய்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள் மத்தியில் இவர்கள் ஸ்மார்டாக உழைத்துக் கொண்டிருப்பார்கள்.

எந்த சூழலையும் தங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டிருப்பார்கள். வெற்றிகளும், சாதனைகளும் இவர்களுக்கு சாதாரணம். தங்களுடன் இருப்பவர்களும் வெற்றிபெற அறிவுரை கூறுவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்