உங்க ராசி என்ன? இப்படிப்பட்ட வாழ்க்கை துணை தான் வருவாங்களாம்

Report Print Printha in ஜோதிடம்

ஜோதிட ரீதியாக ஒருவரின் ராசியை வைத்து அவர்களுக்கு எப்படிப்பட்ட துணை அமையும் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் புதுமையை விரும்புபவர்கள். எனக்கு நானே முதலாளி என்ற வகையில் செயல்படுவார்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவர்கள் தன் வாழ்க்கைத் துணையின் மேல் அதிக அக்கறை காட்டுபவராக இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கார்கள் காதலை உணரக்கூடியவர்கள். காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்களிடம் இருக்கும் ஒரு நல்ல பழக்கம்.

இவர்கள் பளிச்சென்று எதையும் யோசிக்காமல் மனதில் பட்டதை பேசி விடுவார்கள். இந்த ராசி ஆண்களிடம் விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மிகவும் சுவாரஸ்யமான பண்புகளைக் கொண்டவர்கள். இவர்களது நட்பு வட்டாரம் கொஞ்சம் பெரியது தான். ஆனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத செயல்களை செய்து காதலியை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள். இவர்களது துணையிடத்தில் மிகவும் அன்பாக நடந்து கொள்வார்கள்.

இவர்கள் இயல்பாகவே மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தும் குணம் உள்ளவர்கள். அதனால் இவர்கள் தன் துணையின் குடும்பத்தை சிறப்பாக பார்த்துக் கொள்ளக் கூடியவர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ஆண்கள் மேன்மையானவர்கள். யார் கருத்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டாலும், அதில் ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்று யோசிப்பவர்கள்.

அதிக தன்னம்பிக்கை கொண்ட இவர்கள் தன் துணையே எந்த வகையிலும் மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் பேசும் குணம் கொண்டவர்கள். அதனால் இவர்கள் தன் காதலை அடிக்கடி வெளிப்படுத்தி மனைவியை மகிழ்ச்சிப்படுத்துபவராக இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசி உள்ள ஆண்கள் எதிலும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். இவர்கள் நம்பிக்கை, அமைதி, பகுப்பாய்வு, அறிவுத்திறன் ஆகியஅனைத்திலும் சிறந்தவர்க.

இவர்கள் தன் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சுத்திறன் மற்றவர்களைக் கவரும் வகையில் இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். எதிலும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்கள். தன் மனைவிக்கு அவ்வப்போது பல ஆச்சரியங்களைக் கொடுத்து கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். இவர்கள், எப்படிப்பட்டவர்களுடனும் சேர்ந்து பயணிக்கும் குணம் கொண்டவர்.

விருச்சிகம்

விருச்சிக ராசி உள்ள ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எந்தக் காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படக்கூடிய இவர்கள் தன் காதல் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்களுக்குப் புதுமையான செயல்களை செய்வது என்றால் மிகவும் பிடிக்கும்.

கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட இவர்கள் எந்த ஒரு விடயத்திலும் பொறுமையுடன் செயல்படுவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்களது துணைக்கு பிடித்தமான ஒரு துணையாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆசைகள் ஏராளமாக இருக்கும். தன் துணையின் மீது அதிக அக்கறை வைத்திருப்பார்கள்.

குறிக்கோளுடன் செயல்படும் இவர்கள் எந்த விடயமாக இருந்தாலும் அதில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசி உள்ள ஆண்கள் மற்றவர்களை நன்கு எடை போடுபவர்கள். இவர்கள் பெண்களை மதிப்பவர். தன்னை நம்பி வந்த துணையை கடைசி வரை கருத்தாக இருந்து காப்பாற்றுவார்கள். நிறையத் திறமைகள் இவர்களிடத்திடத்தில் இருக்கும்.

மீனம்

மீன ராசி உள்ள ஆண்கள் சொந்தங்கள் இருந்தாலும் தணித்து நின்று வாழ்க்கையில் போராடக்கூடியவர்கள். இவர்கள் அனைவரையும் விட தனக்கு அமையும் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இவர்கள் துணையுடன் கழிக்கும் ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றுவார்கள். அதிக கற்பனை திறன் கொண்டவர்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்