தமிழ்ப் புத்தாண்டு: விளம்பி வருடத்தில் நிகழ இருக்கும் முக்கிய நிகழ்வுகள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1391Shares
1391Shares
lankasrimarket.com

இந்த விளம்பி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி (14.04.2018) சனிக்கிழமை, திரயோதசி, உத்திரட்டாதி நட்சத்திரம், ஐந்திரம் நாம யோகம், பத்திரை கரணத்தில் காலை 08.16 மணிக்கு செவ்வாய் ஹோரையில் ரிஷப லக்னத்தில் மீன நவாம்சத்தில் பிறக்கிறது.

இந்த விளம்பி வருடத்தில் நிகழ இருக்கும் முக்கிய நிகழ்வுகள்
 • மருத்துவ பொருள்கள் பல்கிப் பெருகும். ரசாயனம், மின்சாரம், வான சாஸ்திரம், மருந்துவகை, கணிதபொருள் உற்பத்தி ஆகியவற்றில் நாடு சிறந்து விளங்கும்.
 • அரசியல் நல்ல நிர்வாகத்தை ஏற்று நடத்தக் கூடியதாக இருக்கும்.
 • உள்நாட்டு பொருள்களின் உற்பத்தியும் திருப்திகரமாக இருக்கும்.
 • பொருளாதாரமும் பற்றாக்குறையின்றி சரளமாக அமையும்.
 • விளையாட்டு போட்டிகளிலும் மிதமான வெற்றி கிடைக்கும்.
 • பெட்ரோலியம், நிலக்கரி சம்பந்தமான பிரச்னைகளையும் மின்சார பற்றாக்குறை ஆகியவை சில நேரங்களில் ஏற்படலாம். இருப்பினும் வெளிநாட்டிலிருந்து எரிபொருள் உற்பத்தி கணிசமாக உயர்ந்து எரிபொருள் பற்றாக்குறையை ஈடுசெய்யும்.
 • இந்திய விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்து கண்டு பிடிப்பார்கள். தெய்வ சிந்தனை, நல்லொழுக்கம் பற்றிய அக்கறை எல்லோரிடமும் ஏற்படும்.
 • பால்பண்ணை, கால்நடை உற்பத்தி ஆகியவைகளுக்கு முக்கிய அந்தஸ்து கிடைக்கும்.
 • நமது நாட்டில் பல தொழிற்சாலைகள் திறக்கப்படும். மூடிக்கிடந்த மில்களும் ஸ்தம்பித்த நிலையிலிருந்த தொழில்களுக்கும் அரசாங்கத்தின் பேராதரவு கிடைக்கும்.
 • நமது நாட்டிலுள்ள கட்சிகளின் பூசல்கள் மறைந்து எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்கிற சித்தாந்தம் பரவ ஆரம்பிக்கும்.
 • இந்த ஆண்டு கல்வியில் பெரும்பாலானோர் தோர்ச்சி பெறுவார்கள்.
 • விவசாயத்திற்குரியவர், மழைக்கோளான சுக்கிரபகவானாவார். அவருடைய லக்னத்தில் இந்த ஆண்டு தொடங்கி இருப்பதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கண்டு பொருளாதாரத் துறையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 • சூரியன் மேகாதிபதியாக ஆவதால் இவ்வருடத்தில் நல்ல மழை பெய்யும்.
 • சுக்கிரபகவான் மழைக்கோள் ஆனபடியாலும் அவர் பெற்றுள்ள சுப பலத்தால் நீர்ப்பாசனங்களும் நல்ல விதத்தில் அமையும். ஏரி, குளம், கண்மாய் முதலிய இடங்களில் போதுமான நீர்த்தேக்கம் உண்டாகும்.
 • நஞ்சை,புஞ்சை, தானியங்கள் சிறப்பாக விளையும். நெல் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.
 • சினிமாத்துறை, சங்கீதம், நாடகம், விளம்பரம், ஊடகத்துறை, மக்கள் தொடர்பு முதலிய சகல துறைகளிலும் பெரியதொரு முன்னேற்றம் ஏற்படும்.
 • பழ வகைகள், காய்கறிகள், அன்றாடம் அழியக்கூடிய, உண்ணக்கூடிய பொருள்களை வியாபாரம் செய்வோருக்கு வியாபாரம் செழித்தோங்கும். அவர்கள் மிகுந்த லாபம் அடைவார்கள்.
 • வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திலிருந்து உதவித்தொகையும் கிடைக்கும்.

- Dina Mani

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்