ஏழரை சனியில் காதலித்தால் என்ன ஆகும்?

Report Print Gokulan Gokulan in ஜோதிடம்

காதல் என்பது பிரபஞ்சம் போல. அனைவராலும் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு ரகசியமாகத்தான் இன்று வரை இருக்கிறது.

விளையாட்டாய் ஆரம்பித்த சில காதல்கள் கல்யாணம் வரை செல்வதும் தீவிரமாய் தொடங்கும் சில காதல்கள் பிரிவை சந்திப்பதும் இதன் காரணங்கள் கடவுளின் இருப்பிடம் போல கண்டுபிடிக்கப்பட முடியாத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட காதலும் கிரகங்களின் கைகளில் அகப்படுமா?

நடக்கும் ஒவ்வொரு விடயமும் அவரவர் கர்ம வினைப்படி நடக்கிறது எனும் உண்மைப்படி பார்த்தால் இதில் அவசியம் கிரகங்களின் வேலை இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

முழுக்க முழுக்க மனதை சார்ந்தது காதல்.அந்த உணர்வுகளைத் தூண்டுவது கிரகங்கள் என்கிறது ஜோதிடம்.

ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஈர்க்கப்படுவது சூரியன் மற்றும் சந்திரனின் தூண்டுதலால்தான். இவை இரண்டும் கண்களுக்கு உரித்தான கிரகங்கள். காதல் கண்கள் வழிதான் ஆரம்பிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதன் பின்னர் அதில் ஸ்பரிசங்களைத் தூண்டுவது சுக்கிர கிரகத்தின் வேலை. காதலில் ஒரு ஒழுங்கு நெறிமுறையைக் கொண்டுவருவது செவ்வாயின் பணி. திருமணத்திற்குப் பின்புதான் சில விடயங்கள் என்றொரு ஒழுக்கக் கோட்பாட்டின் படி சில காதல்கள் நகர்வதற்கு செவ்வாய்தான் காரணம்.

காதலில் நேர்மை இருந்தால் அது செவ்வாய் பலம் பெற்றதால்தான் மட்டுமே இருந்திருக்க முடியும். செவ்வாய் பலவீனமாக இருப்பின் இவர்கள் காதல் தோல்வியில் முடியும்.

ஆக மொத்தம் காதல் வெற்றிபெற சூரியன் சந்திரன் சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் காதலிப்பவர்களின் தசா புத்தி கொண்டும் சில விடயங்கள் நடக்கும்.

உதாரணமாக ஏழரை சனி காலங்கள் மற்றும் அஷ்டம சனி காலங்களில் ஆரம்பிக்கும் காதல்கள், இந்தக் காலம் முடிந்தவுடன் பிரிந்து விடுகின்றன.

ஆகவே கடவுளைப் போலவே காதலையும் கொஞ்சம் முறையோடு அணுகுவது நமக்கும் நம்மைக் காதலிப்பவருக்கும் நன்மை விளைவிக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers