இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்!

Report Print Kabilan in ஜோதிடம்
1506Shares
1506Shares
lankasrimarket.com

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

அதில் இன்று எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது... யாருக்கு நஷ்டம், போட்டி உண்டாகப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். வாகன விருத்தி உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, பாராட்டப்படுவார்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்

ரிஷிபம்

தொழில் சார்ந்த முயற்சிகளில் காரிய சித்தி அடைவீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

மிதுனம்

அந்நியர்கள் மூலம் பொருளாதாரம் சிறப்படையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் புகழ் உண்டாகும்.

கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கடல்மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - தேன் நிறம்

கடகம்

தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

சிம்மம்

சிம்மம் அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

கன்னி

கன்னி கால்நடைகளால் லாபம் உண்டாகும். மனதில் உண்டான கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும்.

சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்

துலாம்

தொழில் மூலம் பிரபலமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசு வகை உதவிகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.

பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். பொன்,பொருள் சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்

விருச்சிகம்

கால்நடைகளால் எண்ணிய லாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 8, அதிர்ஷ்ட நிறம் - இளநீலம்

தனுசு

வாகனப் பயணங்களில் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் பொறுமையைக் கடைபிடிக்கவும். பொருள்சேர்க்கை உண்டாகும். எதிர்காலப் பலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அவப்பெயர் ஏற்படுவதற்கான சூழல் அமையும்.

எனவே பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்ககளை அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

மகரம்

மனைவியின் மூலம் சுப விரயம் உண்டாகும். தொழிலுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புனித யாத்திரை சென்று மகிழ்வீர்கள். இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள்அரமையும்.

நெருஞ்கிய உறவினர்களிடம் வீண் விவாதஙகளைத் தவிர்க்கவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்

கும்பம்

போட்டிகளில் வெற்றி கிடைக்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளை வாங்கிக் குவிப்பீர்கள். பங்காளிகளிடம் அமைதியைக் கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - வெளிர் மஞ்சள்

மீனம்

பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக்கூடிய செய்திகள் வந்தடையும். கலைஞர்களுக்கு சிறப்பான நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புராண, இதிகாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்