உங்க ராசி என்ன: இரண்டு வரிகளில் உங்க குணங்கள் பற்றி சொல்லவா?

Report Print Trinity in ஜோதிடம்
820Shares
820Shares
ibctamil.com

ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொண்டு வாழ்ந்தாக வேண்டிய உலகில் மனிதர்களோடு நல்ல பழக்கத்தில் இருக்கவும் சர்ச்சைகள் இன்றி நல்ல புரிதல்களோடு வாழவும் மனிதர்களது குணாதிசயங்கள் முக்கியமாகின்றது.

ஒருவரின் குணாதிசயங்கள் பற்றி புரிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. இருந்த போதும் ஒருவரது ராசி அவரது குணநலன்கள் அமைய பெரும் காரணமாக இருப்பதால் ஒருவரது ராசி வைத்து அவரது முக்கியமான குணங்களை இரண்டு வரிகளில் கூறுகிறோம். புரிந்து பழகி உறவில் வெல்லுங்கள்.

மேஷ ராசிக்காரர்கள் வேடிக்கையானவர்கள் . நகைச்சுவையாளர்கள் கூடவே சற்று ஆக்ரோஷமானவர்களும் கூட. கொஞ்சம் கோபம் நிறைய பேரார்வம் கொண்டவர்கள்.

ரிஷபராசிக்காரர்கள் உத்தமானவர்கள். ஆசைவெறி கொண்டவர்கள் . மேலும் வெற்றி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.

மிதுன ராசிக்காரர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள். அதேசமயம் குழப்பவாதிகள். சமூக மக்களோடு இயைந்து போக கூடியவர்கள். நிறைய நண்பர்கள் வைத்திருப்பார்கள். சரியான முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்காது.

கடக ராசிக்காரர்கள் இனிமையானவர்கள். மென்மை குணம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய இவர்களை எளிதில் பலரும் முட்டாளாக்கி விடுவார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் தைரியம் மற்றும் சுறுசுறுப்பானவர்கள் இவர்கள் அதிகாரத்தையும் மரியாதையையும் எதிர்பார்ப்பவர்கள். தலைமை பண்பு என்பது இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் கொஞ்சம் விவகாரமான இவர்கள் வாதாடுவதில் வல்லவர்கள். புத்திசாலிகளாக இவர்கள் மற்றவர்களிடம் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.

துலாம் ராசிக்காரர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதால் எச்சரிக்கையோடுதான் இருப்பார்கள். நடுநிலையான நீதிபதியாக இருக்கும் இவர்களுக்கு இரு தரப்பினர் பற்றியும் மிக சரியாக எடை போடுவார்கள். இவர்கள் சாது என்பதால் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் சற்று பிடிவாதக் காரர்கள் ஆனால் காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்கள்.மிகவும் எச்சரிக்கையாக நடக்கும் இவர்களிடம் பழகும் அனைவரும் இவர்களை கண்மூடித் தனமாக நம்புவார்கள்.

தனுசு ராசிகாரர்கள் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் வெளிப்படையானவர்கள். எதையும் ஆர்வமோடு வெகு சீக்கிரம் கற்று கொள்ளும் திறன் பெற்றவர்கள். தங்களது வெளிப்படையான குணத்தால் மனதில் பட்டத்தை உடனே சொல்லிவிடுவார்கள்.

மகர ராசிகாரர்கள் பேரார்வம் அதே சமயம் தலைக்கனம் கொண்டவர்கள். தங்களது தொழில் மற்றும் பணிகளில் பேரார்வத்துடன் பணிபுரிவார்கள், வெற்றி கிடைக்கும் போது தலைக்கனம் கொண்டவர்களாக மாறி விடுவார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் சீரற்றவர்கள் மற்றும் உணர்ச்சிவசப்படுவார்கள். இவர்களிடம் அதீத நினைவாற்றல் சக்தியும் கணக்கீடுகளும் இருக்கும். தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.

மீன ராசிக்காரர்கள் கலைத்திறன் மிக்கவர்கள். அறிவாளிகளும் கூட. உள்ளுணர்வு சொல்வதை கேட்கும் இவர்கள் கலைத்திறன் மிக்கவர்கள். எதிலும் யோசித்து புத்திசாலித்தனமாகவே செயல்படுவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்