காதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்! உங்க ராசியும் இருக்கா?

Report Print Kabilan in ஜோதிடம்
841Shares
841Shares
ibctamil.com

ராசிகள், ராசிகளை ஆதிக்கம் செய்யும் கிரங்கள், கோள்களின் தசாபுத்திகளைப் பொறுத்து காதல் ஒருவருக்கு ஏற்படுகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அவரின் காதல் வெற்றி பெறும். இல்லையெனில் காதல் தோல்வி ஏற்படும். காதலில் சிறந்து விளங்கும் ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்- விருச்சிகம்

இந்த ராசிக்காரர்கள் காதலில் சிறப்பாக செயல்பட மாட்டார்கள். இவர்களது காதல் மற்றும் திருமண வாழ்க்கையானது அந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்காது. ஏனெனில், இவர்கள் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டவர்கள்.

ரிஷபம்- துலாம்

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களின் காதலில் உண்மையும், தூய்மையும் நிறைந்து இருக்கும். எனினும், துலாம் ராசிக்காரர்களுக்கு நடைபெறும் காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிய வாய்ப்புள்ளது.

மிதுனம்- கன்னி

இந்த ராசிக்காரர்கள் கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் கொண்டவர்கள் ஆவர். மிதுனம் ராசியினருக்கு காதல் ஏற்படுவது அரிதானது. ஏனெனில், எதிர்பாலினத்தனரின் மீது இவர்களுக்கு உண்டாகும் ஆர்வம், நாளடைவில் மறைந்து விடும்.

ஆனால், கன்னிராசிக்காரர்கள் காதல் உணர்வும், கடமை உணர்வும், அன்பும் அதிகளவில் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம்

கற்பனை வளம் கொண்டவர்களான கடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் சரிப்பட்டு வராது. இவர்கள் ஒருவேளை காதல் வயப்பட்டாலும், அது தோல்வியிலேயே முடியும்.

அதிக உணர்ச்சி வசப்படும் இவர்களுக்கு தைரியமும் தேய்ந்து மறையும். இவர்களுக்கு கோபத்தால் நரம்புகள் பாதிக்கப்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கல்வியில் திறமையானவர்களாக இருப்பார்கள். திறமைசாலியாகவும் இருப்பதனால், இவர்களுக்கு கர்வமும் இருக்கும். ஆனால், இவர்களின் காதல் மகத்துவம் வாய்ந்ததாக இருப்பதனால், இவர்களின் காதல் திருமணத்தில் முடியும் வாய்ப்பு அதிகம்.

தனுசு- மீனம்

காதலில் திறமைசாலிகளாக இருக்கும் இவர்கள், காதலில் வெற்றியடைய அதிகமாக போராடுவார்கள். இவர்கள் காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார்கள். காதல் எண்ணம் அதிகம் இருக்கும் இவர்களின் காதல் வெற்றி அடையும்.

மகரம்- கும்பம்

இவர்கள் தங்களின் துணையிடம் அதிக பற்றுதலோடு இருப்பார்கள். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்கள் காதலிக்காமல் இருக்க மாட்டார்கள். கும்ப ராசிக்காரர்களும் உண்மையாக காதலிப்பவராக இருப்பார்கள்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்