இந்த நான்கு ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம்.

மீனம்

உத்தியோகஸ்தர்கள் தங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிர்ஷ்ட எண் - 1
 • அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
கும்பம்

தொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் - 5
 • அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை
மகரம்

நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பூா்விக சொத்துகள் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிர்ஷ்ட எண் - 6
 • அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்
தனுசு

ஆராய்ச்சியில் எண்ணிய எண்ணம் ஈடேறும். கவனக் குறைவால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - மேற்கு
 • அதிர்ஷ்ட எண் - 9
 • அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்
விருச்சிகம்

பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். எண்ணங்கள் மேலோங்கும் நாளாக அமையும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திருமண வரன்களால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிர்ஷ்ட எண் - 3
 • அதிர்ஷ்ட நிறம் - இளம்மஞ்சள்
துலாம்

புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான தன வரவுகள் கிடைக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் - 8
 • அதிர்ஷ்ட நிறம் - நீலநிறம்
கன்னி

உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் பொருள் இழப்பு உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிர்ஷ்ட எண் - 7
 • அதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்
சிம்மம்

தொழிலில் புதிய நபர்களின் வருகையால் நினைத்த லாபம் கிடைக்கும். உயரமான இடங்களுக்கு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். திறமையான பேச்சின் மூலம் லாபத்தை எட்டுவீர்கள். வாகனங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - மேற்கு
 • அதிர்ஷ்ட எண் - 3
 • அதிர்ஷ்ட நிறம் - அடர்மஞ்சள்
கடகம்

பொது சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் சேமிப்பு உயரும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். திறமைகளால் பலன் அடைவீர்கள்.

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிர்ஷ்ட எண் - 9
 • அதிர்ஷ்ட நிறம் - அடர்சிவப்பு
மிதுனம்

இளைய உடன் பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தமான பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் - 6
 • அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை நிறம்
ரிஷபம்

ஆடை மற்றம் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நாளாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் உண்டாகும். பணியில் புதிய நபர்களை சந்திப்பீர்கள்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிர்ஷ்ட எண் - 5
 • அதிர்ஷ்ட நிறம் - கிளிப்பச்சை

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers