நீங்க எந்த ராசி? அப்படியென்றால் இன்றைய அதிஷ்டசாலி நீங்கள் தான்

Report Print Kavitha in ஜோதிடம்
650Shares
650Shares
ibctamil.com

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம்.

மேஷம்

எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு நிறைய பேருக்கு உதவி செய்வீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ள வேண்டிய நாள். பயண அலைச்சல் இருந்தாலும் நாளின் இறுதியில் நல்ல லாபம் கிட்டும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் வந்து சேர கால தாமதமாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

சுப விரயங்கள் இருக்கும்.

இன்று எண் 1 உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும். அதிர்ஷ்டமான திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

ரிஷபம்

வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் ஆகியவை நீங்கி, மகிழ்ச்சி பெருகும்.

இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் உண்டாகும். பேச்சுத் திறமையால், சாதிக்கும் நாள்.

புதிய கூட்டாளிகள் தொழிலில் வந்து இணைய வாய்ப்பிருக்கிறது.

வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷடமான திசை வடக்கு. அதிர்ஷ்ட நிறம் கருநீலம், அதிர்ஷ்ட எண் 9.

மிதுனம்

வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி பொங்கும். வெளியூரில் இருந்து சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் கால தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளையும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.

கடகம்

மனதில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீரும். புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள்.

இதுவரை சொத்து விவகாரத்தில் இருந்து வந்த பிரச்னைகளும் குழப்பங்களும் தீரும்.

என்ன பிரச்னையாக இருந்தாலும் மிக எளிதாகக் கையாள்வீர்கள். தந்தையின் உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுநலன்களில் அக்கறை செலுத்துவீர்கள்.

இன்றைக்கு பச்சை நிறம் உங்களுடைய அதிஷ்டத்துக்குரிய நிறமாக அமையும். அதேபோல், 7 ஆம் எண்ணும் கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறங்களாக இருக்கும்.

சிம்மம்

இதுவரையிலும் பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து உங்களுக்கு வந்து சேர வேண்டிய பங்கு மிகச்சரியாக வந்து சேரும். தொழிலால் பிறரிடம் மரியாதை கூடும்.

தொழிலில் லாபம் பெருகும். உங்களுடைய திறமையான பேச்சால் எல்லோருடைய மனதையும் கவர்ந்துவிடுவீர்கள். பெரியவர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

இன்றைக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாகவும் எண் 6 அதிர்ஷ்ட எண்ணாகவும் வெள்ளை நிறம் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இன்றைய அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் நீங்கள் தான்.

கன்னி

பொன் மற்றும் பொருள்களை வாங்கி சேர்ப்பீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

கடல் வழி பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு, பொதுப்பணிகளில் ஈடுபடுவீர்கள்.

உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவீர்கள்.

இன்று வடக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாகவும் காவி நிறம் அதிர்ஷ்டம் தரும் நிறமாகவும் எண் 2 அதிர்ஷ்ட எண்ணாகவும் அமையும்.

துலாம்

பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் நாள். போட்டிகளில் வெல்வீர்கள்.

வீட்டில் உள்ள பெரியவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து, அனுசரித்துப் போவது நல்லது.

தனலாபம் உண்டாகும். மகிழ்ச்சியில் மனம் குதூகலிக்கும்.

இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் இளஞசிவப்பு, அதிர்ஷ்ட எண் , அதிர்ஷ்ட திசை மேற்கு.

விருச்சிகம்

தனியாக தொழில் செய்பவர்களைவிட மற்றவர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.

தலைமைப் பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சிறக்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபணச் சேர்க்கைகளுக்கான முதலீட்டை தொடங்குவீர்கள்.

தொழிலுக்கு நண்பகளின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

மேற்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் திசையாக இருக்கும். 9 ஆம் எண்ணும் பச்சை நிறமும் உங்களுக்கு இன்று மேன்மையைத் தரும்.

தனுசு

இன்று முழுக்க உங்களின் தொழிலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தே யோசித்து கொண்டிருப்பீர்கள்.

மிகுந்த நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையுடனும் தொழிலில் வெற்றியை நோக்கி நடைபோடும் நாளாக அமையும்.

வேலையிடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள்.

வீண் கவலைகள் வந்து போகும். எந்த செயலாக இருந்தாலும் செய்யும்முன் நன்கு யோசித்து கவனமாக செயல்படவும்.

தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

இன்று உங்களுக்கு கிழக்கும் பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாகவும் அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

மகரம்

முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத ஆட்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

இல்லையேல் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

புதிய வேலை தேடுபவர்கள் தேவையில்லாமல் அலைச்சல்களை சந்திப்பீர்கள்.

எந்த செயலைச் செய்தாலும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

தெற்கு திசையும் ஆறாம் எண்ணும் வெள்ளை நிறமும் இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருகின்றன.

கும்பம்

நீங்கள் வெகுநாட்ளாக, வங்கிகளில் எதிர்பார்த்து காத்திருந்த கடன் தொகைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசு சார்பில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.

சுற்றுலா, நண்பர்களுடனான கேளிக்கை ஆகியவற்றால் மனம் குதூகலமடையும்.

என்னதான் கொண்டாட்டங்களில் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

இன்று மேற்கு திசையும் எண் 4 ம் அதேபோல், ஊதா நிறமும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தருபவையாக அமையும்.

மீனம்

தொழில் விருத்தியடையும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

நீங்கள் செய்யும் நல்ல செயல்கள் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். குழந்தைகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும்.

மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

இன்று கிழக்கு திசை அதிர்ஷ்ட திசையாகவும் 2 ஆம் எண் அதிர்ஷ்ட எண்ணாகவும் மயில்நீலம் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாகவும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்