வைகாசி மாத ராசிபலன்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்
1103Shares
1103Shares
ibctamil.com

12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலன்கள் இதோ,

மேஷம்

தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்குதான் ஆனந்தம் ஆரம்பமாகிறது என்பதனை அறிந்த நீங்கள், கற்றது கைமண் அளவு என்றெண்ணுபவர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குறிப்பாக வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது நல்ல விதத்தில் முடியும்.

வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். வாகனம் வாங்குவீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள் அமர்ந்து முன்கோபத்தையும், காரியத் தடைகளையும் ஏற்படுத்திய சூரியன் இப்போது 2ம் வீட்டில் நுழைந்திருப்பதால் உடல் நலம் சீராகும். என்றாலும் கண்ணில் அடிப்படி வாய்ப்பிருக்கிறது. கடுமையாகப் பேசி சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள்.

செவ்வாயும், கேதுவும் 10ல் நிற்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பொறுப்பற்றப் போக்கு மாறும். நகரை ஒட்டி வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

இந்த மாதம் முழுக்க புதன் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால் பழைய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். சனிபகவான் 9ல் நிற்பதால் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும்

எனவே கொஞ்சம் சுற்று வட்டாரத்தைப் புரிந்து கொண்டு இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுவது, பழகுவது நல்லது. குருபகவான் சாதகமாக இருப்பதால் கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களின் அழகு, இளமைக் கூடும்.

பிரச்னைகள் வெகுவாக குறையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். திருமணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள். மாணவர்களே! நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். கன்னிப்பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும்.

அரசியல்வாதிகளே! வெற்றி உண்டு. எதிர்க்கட்சிக்காரர்களை சமயோஜிதமாகப் பேசி திணறடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். மாதத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களும் வருவார்கள். புது ஒப்பந்தங்களும் கூடி வரும். என்றாலும் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். அவர்களை அனுசரித்துப் போங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

கட்டுமானப் பொருட்கள், ரியல் எஸ்டேட், மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். நேர் மூத்த அதிகாரி உங்களை எதிர்த்தாலும் மேல்மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள்.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! மரப்பயிர், தோட்டப் பயிர் மூலமாக லாபமடைவீர்கள். சாமர்த்தியமாக காய்நகர்த்த வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 17, 18, 19, 24, 25, 26, 27 மற்றும் ஜூன் 4, 5, 6, 7, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 28ம் தேதி மாலை 5.44 மணி முதல் 29, 30ம் தேதி மாலை வரை.

ரிஷபம்

எதார்த்தமான பேச்சால் எல்லோரையும் வசீகரிக்கும் நீங்கள், பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நியாயவாதிகள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடனைப் பைசல் செய்ய வழி கிடைக்கும்.

அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை கொடுத்து முடிப்பீர்கள். வீட்டிலிருந்த கழிவு நீர்ப் பிரச்னை, குடிநீர்ப் பிரச்னை தீரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். இரண்டு சக்கரத்தை தந்து விட்டு நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள்.

உங்களின் சுகாதிபதியான சூரியன் கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருந்து வீண் செலவுகளையும், அலைச்சல்களையும், புதுப் பிரச்னைகளையும் உருவாக்கினார். உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தார். அப்படிப்பட்ட சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருக்கிறார்.

சூரியனுடன், உங்களின் தனபூர்வ புண்யாதிபதியான புதனும் 20ம் தேதி முதல் சேர்ந்து அமர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். நெடுநாட்களாக இழுபறியாக இருந்து வந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

ஆனால், சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், உடல் உஷ்ணம், சிறுசிறு வேனல் கட்டிகள் வந்துச் செல்லும். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். எவ்வளவோ சம்பாதித்தும் எதுவும் கையில் மீளவில்லையே என்ற ஒரு ஆதங்கமும் உள்மனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். குருவும் 6ல் நிற்பதால் அவ்வப்போது வருங்காலத்தைப் பற்றி ஒரு பயம் இருக்கும்.

யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அஷ்டமத்துசனி தொடர்வதால் நீங்கள் எது பேசினாலும் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

மாணவர்களே! வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

அரசியல்வாதிகளே! மக்கள் மத்தியில் புகழடைவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரத்திற்கேற்ப புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும்.

யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். கலைத்துறையினரே! தடைபட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும்.

விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறையை நீக்க புதுவழி கிடைக்கும். மரப் பயிர்களால் லாபமடைவீர்கள். இடைவிடாத உழைப்பாலும், சமயோஜித புத்தியாலும் சவால்களை சமாளிக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 18, 19, 20, 21, 27, 29, 30 மற்றும் ஜூன் 6, 7, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 31 மற்றும் 1,2ம் தேதி மாலை 3.14 மணி வரை.

மிதுனம்

எல்லோரிடமும் நட்பு பாராட்டும் நீங்கள், அனுமதியின்றி அடுத்தவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கோவில் கட்டுவது, பராமரிப்பது, கும்பாபிஷேகம் செய்வது போன்றவற்றிற்காக நிதி உதவிகள் செய்வீர்கள். முதல் மரியாதையும் விழாக்களில் கிடைக்கும். சூரியன் இந்த மாதம் முழுக்க 12ல் நிற்பதால் அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.

சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வேலைச்சுமை குறையும். காது, பல் வலி விலகும். உடல் சூட்டால் இருந்து வந்த வறட்டு இருமல் குணமாகும். உங்களின் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். செவ்வாயும், கேதுவும் 8ல் தொடர்வதால் மன இறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்த காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரங்களால் அலைச்சல் இருக்கும்.

முழுமையாக யாரையுமே நம்ப முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் சண்டைகள் வந்து நீங்கும். சனிபகவான் ராசிக்கு 7ம் வீட்டில் கண்டகச் சனியாக அமர்ந்து உங்கள் ராசியையும் பார்த்துக் கொண்டிருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். 5ம் வீட்டிலேயே குரு நீடிப்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோவில் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

மாணவர்களே! ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

அரசியல்வாதிகளே! கட்சி நிர்வாகிகள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். கோஷ்டிப் பூசலிலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிமாநிலம், அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும்.

நல்ல அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கன்ஸ்ட்ரக்சன், எலக்ட்ரிக்கல், வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக பழி சுமத்தியவர்கள், எதிராக வேலைப் பார்த்தவர்கள் பலவீனமடைவார்கள். மேலதிகாரியுடன் நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். என்றாலும் கண்டகச் சனியால் புதிய வேலையில் சென்று சேருவது குறித்து கவனமாக முடிவெடுப்பது நல்லது.

கலைத்துறையினரே! கன்னடம், மலையாளம் பேசுபவர்களால் நன்மை உண்டு. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

விவசாயிகளே! பூச்சி, எலித் தொல்லை குறையும். கரும்பு, சவுக்கு லாபம் தரும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 15, 20, 21, 22, 23, 24, 25, 29, 30, 31 மற்றும் ஜூன் 8, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 2ம் தேதி மாலை 3.15 மணி முதல் 3, 4ம் தேதி வரை.

கடகம்

எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துப் பேசி அனைவரையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சொன்ன சொல் தவற மாட்டீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு இருந்து வந்த கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

வீட்டில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். விருந்தினர், உறவினர் வருகையால் வீடு களைக்கட்டும். உயர்ரக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். பழுதான மின்சார சாதனங்கள், சமையலறை சாதனங்களை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.

செவ்வாயும், கேதுவும் 7ல் நிற்பதால் உடன்பிறந்தவர்களுடன் சச்சரவுகளும், அவர்களால் செலவுகளும் வந்துப் போகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வாகனத்தையும் அதிவேகமாக இயக்காதீர்கள்.

இந்த மாதம் முழுக்க சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் குறையும். ராசிக்கு 6ம் வீட்டில் சனி வலுவாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வருங்காலத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமுண்டு. குரு 4ல் தொடர்வதால் கொஞ்சம் போராட்டம் இருக்கும். தூக்கமில்லாமல் போகும்.

பழைய பிரச்னைகள் இப்போது விஸ்வரூபம் எடுத்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும்.

மாணவர்களே! தேர்வில் வெற்றி பெறுவீர்கள். கடைசி நேரத்தில் எதிர்பார்த்த பாடப் பிரிவில் சேர வாய்ப்பிருக்கிறது.

கன்னிப் பெண்களே! அடி வயிற்றிலிருந்த வலி குறையும். பழைய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகளே! அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகுங்கள்.

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியனும், புதனும் வலுவாக நிற்பதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உணவு, துணி, கட்டுமானப் பொருட்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.

கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களால் இருந்த பிரச்னைகள் குறையும். அரசாங்க கெடுபிடிகள் நீங்கும். ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளால் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் செல்வாக்கு அதிகரிக்கும்.

உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களிடையே நிலவி வந்த அதிருப்தி விலகும்.

விவசாயிகளே! விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் வேறு தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். செங்கல், மர வகைகளால் லாபம் உண்டாகும்.

கலைத்துறையினரே! தள்ளிப்போன பட வாய்ப்புகள் வரும். பழைய கலைஞர்கள் உங்களை பாராட்டுவார்கள். எதிர்பார்த்தவைகள் யாவும் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 16, 17, 22, 23, 24, 25, 27, 28, 31 மற்றும் ஜூன் 1, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 5, 6, 7ம் தேதி நண்பகல் 12.37 மணி வரை.

சிம்மம்

தும்பைப் பூப்போல சிரிப்பும், துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு 6ல் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் வேலைச்சுமை அதிகமாகும். ஆனால், வழக்குகள் சாதகமாகும். சகோதர வகையில் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் மற்றொரு பக்கம் பாசப் பிணைப்பு அதிகரிக்கும்.

சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பதற்கு வி.ஐ.பிகள் உதவுவார்கள். இழுபறியாக இருந்து வந்த சொத்துப் பிரச்னை தீரும். சிலர் வீடு மாறுவீர்கள். சூரியனும், புதனும் பலம் பெற்று இந்த மாதம் முழுக்க வலுவாக நிற்பதால் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள்.

உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ராஜதந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறிந்து கொள்வீர்கள். வீடு உங்கள் ரசனைக் கேற்ப அமையும். புது வேலை கிடைக்கும்.

கல்யாண முயற்சிகளும் தாமதமின்றி முடியும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 5ம் வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

பூர்வீக சொத்தை விற்று சிலர் டவுன், நகர எல்லையில் சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கை கொஞ்சம் கண்காணித்துக் கொள்ளுங்கள். என்றாலும் குருபகவான் 3ம் வீட்டில் மறைந்து கிடப்பதனால் அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம்.

மாணவர்களே! நீங்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவு உங்களுக்கு கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ந்து உயர்கல்வி தொடரும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வாழ்க்கைக் துணை அமையும்.

அரசியல்வாதிகளே! எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு சிலர் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் பணிவார்கள். உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். வேலையாட்கள் உங்களுடைய அருமையை தெரிந்து கொள்வார்கள்.

பொறுப்பாக வேலையை கவனிப்பார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதனை அறிந்து அதற்கேற்ப சில மாற்று ஏற்பாடுகள் செய்வீர்கள். உத்யோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையும் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களின் படைப்புகள் வெற்றிகரமாக பேசப்படும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். தண்ணீர் வசதி கிட்டும். ஊரில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வித்தியாசமான அணுகுமுறையால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 17, 18, 19, 25, 26, 27, 28 மற்றும் ஜூன் 3, 4, 5, 6, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 7ம் தேதி நண்பகல் 12.37 மணி முதல் 8, 9ம் தேதி இரவு 8.12 மணி வரை.

கன்னி

பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையுடையவர்கள். குருபகவான் 2ல் தொடர்வதால் முதிர்ச்சியான, அறிவுப் பூர்வமான பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள்.

நீங்கள் மிகவும் பக்குவப்பட்டு விட்டதாக சிலர் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். சூரியன் 9ம் வீட்டிலேயே நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். செவ்வாயும், கேதுவும் 5ல் தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணப் புழக்கம் உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். வீடுகட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பழுதான மின்சார சாதனங்கள், சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வாகனம் வாங்குவீர்கள்.

4ம் வீட்டில் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாக இருப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கும் கை, கால் வலிக்கும். சோர்வு, அலுப்பு வந்துப் போகும். மனைவி வழியில் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.

சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.

மாணவர்களே! அலைந்து, கொஞ்சம் சிரமப்பட்டு விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள்.

கன்னிப் பெண்களே! முகப்பரு, அலர்ஜி நீங்கும். அழகு கூடும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமானவருடன் மோதல் வரும். கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தில் வியாபாரம் ஓரளவு சூடுபிடிக்கும். பற்று வரவும் உயரும். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். வாடகை இடத்தில் கடையை வைத்திருப்பவர்களுக்கு கடை உரிமையாளரால் தொல்லை அதிகரிக்கும். வாடகை அதிகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

கமிஷன், ஸ்டேஷனரி, துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். அர்த்தாஷ்டமத்துச் சனி தொடர்வதால் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் மூத்த அதிகாரிகளைப் பற்றி எதுவும் சொல்லி வைக்காதீர்கள்.

செய்யாத தவறை உங்கள் மீது சுமத்த முயற்சிப்பார்கள். கவனமாக இருங்கள். விவசாயிகளே! வாய்க்கால் தகராறு, வரப்பு தகராறு எல்லாம் வேண்டாம். அக்கம்பக்கம் நிலத்துக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை தரப் பாருங்கள். பழைய கலைஞர்கள் உதவுவார்கள். ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக இருந்து சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 17, 18, 19, 20, 21, 23, 27, 29, 30 மற்றும் ஜூன் 1, 5, 6.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 15ம் தேதி மாலை 5.12 மணி வரை மற்றும் ஜூன் 9ம் தேதி இரவு 8.11 மணி முதல் 10,11ம் தேதி வரை.

துலாம்

மென்மையும், விட்டுக்கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக் கூடியவர்கள். ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால் பழைய சொத்து விற்பதன் மூலமாகவோ, பாகப்பிரிவினை மூலமாகவோ பணம் வரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலர் பழைய நகையை மாற்றி புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். உங்களின் சுகஸ்தானமான

4ம் வீட்டிலேயே செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் சோர்வு, களைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரும். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையொழுத்திட வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். புதன் சாதகமான வீடுகளிலும்,சூரியன் 8ல் மறைந்ததால் பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

பழைய பிரச்னைகளிலிருந்து விடுபட சில வழி வகைகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மோதல் போக்கு நீங்கும். குருபகவான் ராசிக்குள்ளேயே நிற்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும் ஆனால் பெரிய பாதிப்புகள் இருக்காது. சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த உதவியும், யாரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

சனிபகவான் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

மாணவர்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

பழைய பாக்கிகளும் வசூலாகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். வேலையாட்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். புது முதலீடுகள் செய்யலாம். கடையை விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகளுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றொரு பக்கம் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு புது உத்யோக வாய்ப்புகளும் கூடி வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். பழைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! மாற்றுப் பயிர், மரப் பயிர் வகைகளால் லாபமடைவீர்கள். புதிதாக ஆழ்குழாய் அமைப்பீர்கள். வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 20, 21, 22, 23, 24, 25, 29, 30, 31 மற்றும் ஜூன் 1, 4, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 15ம் தேதி மாலை 5.13 மணி முதல் 16,17ம் தேதி இரவு 8.30 வரை மற்றும் ஜூன் 12,13ம் தேதி வரை.

விருச்சிகம்

எளிமையான வாழ்க்கையும், வெகுளித்தனமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். இந்த மாதம் முழுக்க செவ்வாயும், கேதுவும் 3ல் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

மனோ தைரியம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். புதுத் தொழில் தொடங்குவதற்கு சிலர் உதவுவார்கள். சூரியன் 7ம் வீட்டில் அமர்ந்து 20ம் தேதி முதல் புதனுடன் சேர்ந்திருப்பதால் அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

மனைவிக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அரசு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் 8ம் தேதி வரை 8ம் வீட்டிலேயே மறைந்து நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவினங்களும் இருக்கும். வாகனம் அவ்வப்போது பழுதாகும்.

9ம் தேதி முதல் சுக்கிரன் 9ல் அமர்வதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். குடும்பத்தில் கணவன்மனைவிக்குள் நிலவிய கருத்து மோதல்கள் விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இருந்த மனத்தாங்கல் விலகும்.

குரு 12ல் நிற்பதால் பயணங்கள் அதிகமாகிக் கொண்டே போகும். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். அவ்வப்போது பழைய கடனை நினைத்து பயம் வந்துப் போகும். 2ம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது என்றாலும் ஏழரைச் சனியாகவும் இருப்பதால் பணம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காக இருக்கும்.

மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெப்பமிட வேண்டாம். மாணவர்களே! ஏழரைச் சனி இருப்பதால் தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

அரசியல்வாதிகளே! மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.வியாபாரத்தில் இந்த மாதம் கொஞ்சம் போராட்டமாக இருக்கும். புது முதலீடுகள் வியாபாரத்தில் செய்ய வேண்டாம். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

அவர்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். இந்த மாதம் முழுக்க அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால், சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய அலுவலகத்தில் வேலை கிடைக்கும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். ஆனால் உங்களை யாரும் புரிந்துக் கொள்ளவில்லையென்று வருத்தப்படுவீர்கள்.

விவசாயிகளே! ஏழரைச் சனி தொடர்வதால் விளைச்சல் மந்தமாக இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை, எலி, பூச்சித் தொல்லை வந்து நீங்கும். சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 15, 16, 22, 23, 24, 25, 26, 31 மற்றும் ஜூன் 1, 2, 3, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 17ம் தேதி இரவு 8.30 மணி முதல் 18,19ம் தேதி வரை மற்றும் ஜூன் 14ம் தேதி வரை.

தனுசு

எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க நினைக்கும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பழுதான வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

மகளுக்கு நல்ல வரன் வரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்ளிருந்த பனிப்போர் நீங்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். செவ்வாயும், கேதுவும் 2ம் வீட்டில் நிற்பதால் திடீர் செலவுகள் அதிகமாகும். நீங்கள் யதார்த்தமாகப் பேசினாலும் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள்.

சகோதர வகையில் மனவருத்தங்கள் வரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சூரியன் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிரிந்துச் சென்றவர்கள் ஒன்று சேருவீர்கள்.

பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். அவர்களுடனான மனவருத்தங்களும் நீங்கும். தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு ஃப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அரசியல்வாதிகள் உதவுவார்கள்.

குரு லாப வீட்டில் நீடிப்பதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மூத்த சகோதரங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஜென்மச் சனி நடைபெறுவதால் பல், காது மற்றும் கழுத்து வலி வரக்கூடும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

சில நேரங்களில் தவறான மருந்து, மாத்திரைகளால் கூட பாதிப்புகள் வரக்கூடும். ஜூன் 20ம் தேதி முதல் 04ம் தேதி வரை புதன் 6ல் மறைவதால் உறவினர்கள், நண்பர்களுடன் உரசல் போக்கு வந்து போகும். குடும்பத்தில் கணவன்மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது.

மாணவர்களே! சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். படிப்பில் முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். பெற்றோர் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.

வியாபாரம் செழிக்கும். அதிரடி லாபம் உண்டு. வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். ரியல் எஸ்டேட், மணல், செங்கல், எலக்ட்ரிக்கல்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். கார் வாங்கி விற்கும் தொழிலும் ஆதாயத்தை தரும். குரு லாப வீட்டில் நிற்பதால் புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

கடையை சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள்.

உங்களுடைய புதிய சிந்தனைகள் எல்லோராலும் பாராட்டப்படும்.

விவசாயிகளே! நிலத்தில் நீர் மட்டம் பெருகும். புதிதாக நிலம் கிரயம் செய்யுமளவிற்கு வருமானம் உயரும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 17, 18, 19, 25, 26, 27, 28 மற்றும் ஜூன் 4, 5, 6, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 20, 21ம் தேதி வரை.

மகரம்

மற்றவர்களின் மனநிலையை துல்லியமாக கணிக்கும் நீங்கள் நிறை, குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக் கூடியவர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும்.

அவர்களின் திருமணம் சம்பந்தமாகவும் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உங்கள் ராசியிலேயே செவ்வாயும், கேதுவும் அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். அவ்வப்போது தூக்கம் குறையும். அடுத்தடுத்தப் பயணங்களால் சோர்வு, களைப்படைவீர்கள். உறவினர், நண்பர்களுக்கு ஓடி ஓடி உழைத்தும், நல்லது செய்தும் உங்களை யாரும் சரியாக மதிக்கவில்லையென்று நினைப்பீர்கள்.

எல்லோரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றார்கள் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். 8ம் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் செலவினங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். வாகனமும் அடிக்கடி பழுதாகும்.

தவிர்க்க முடியாத பயணங்களும் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகளும் உண்டு. 9ம் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் அது முதல் வேலைச்சுமை குறையும். வாகனப் பழுது சரியாகும். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். ஏழரைச் சனி நடைபெறுவதால் யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். யாராக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. மாணவர்களே! ஆரம்பத்திலிருந்தே படிப்பில் அக்கறை காட்டுங்கள்.கோபத்தை குறையுங்கள்.

கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தி தலைமையிடம் நெருங்கவிடாமல் தடுப்பார்கள். வியாபாரத்தில் இந்த மாதத்தில் கணிசமாக லாபம் கூடும்.

ஆனால், குருவால் காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் சுமாராக போகும். புதிய வாடிக்கையாளர்களை இழுக்க புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். உ

வு, கமிஷன், புரோக்கரேஜ், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள்.

வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும்.

கலைத்துறையினரே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று கலங்கி நிற்பீர்கள். இளைய கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லையாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் மகசூல் குறையும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 18, 19, 20, 27, 28, 29, 30 மற்றும் ஜூன் 6, 7, 8, 9, 11.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 22,23ம் தேதி வரை.

கும்பம்

பிறர் மதிக்கும்படி நடந்து கொள்ளும் நீங்கள், பணம் காசை விட குணத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள். குரு உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் போகும். ராசிக்கு 12ல் செவ்வாயும், கேதுவும் தொடர்வதால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக நீங்கள் ஒன்று நினைக்க சில விஷயங்கள் வேறுவிதமாகப் போய் முடியும்.

நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு விதமாகப் புரிந்து கொள்வார்கள். சகோதரங்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் நல்ல விதத்தில் முடியும். மனக்குழப்பங்கள் நீங்கும். தன்னம்பிக்கை பிறக்கும்.

குழந்தை பாக்யம் உண்டு. மகளுக்கு இருந்த கோபம் நீங்கும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 08ம் தேதி வரை சுக்கிரன் வலுவாக நிற்பதால் உயர்ரக மின்சார சாதனங்கள், கம்ப்யூட்டர் வாங்குவீர்கள். ஆனால் 09ம் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைவதால் வாகன விபத்து, வாகனப் பழுது வந்துப் போகும். மனைவியுடன் கருத்து மோதல் வரும்.

உறவினர்கள் ஒரு சிலரின் இரட்டை வேடத்தைப் பார்த்து வேதனைப்படுவீர்கள். சனிபகவான் லாப வீட்டில் வலுவாக நிற்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களே! நட்பு வட்டம் விரியும். கணிதப் பாடத்தில் தொடக்கத்திலிருந்தே கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! தோலில் இருந்த நமைச்சல், அலர்ஜி நீங்கும். அழகுக் கூடும்.

அரசியல்வாதிகளே! கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும்.

பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். 12ல் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும், மற்றொருவர் உங்களுக்கு எதிராக செயல்படுவார். கட்டுமானப் பொருட்கள், மின்னணு, மின்சார வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

அரசு பதவியில் இருக்கும் அதிகாரி உங்களுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்த உதவிகரமாக இருப்பார். உத்யோகத்தில் இந்த நேரம் என்னாகுமோ, வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். தேவைப்பட்டால் உங்களுடைய முழு புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் அடக்கமாக, அமைதியாக இருந்துவிடுங்கள்.

சில நேரங்களில் மௌனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினரே! காலதாமதமாக இருந்து வந்த விஷயங்களெல்லாம் நல்ல விதத்தில் முடியும். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! மகசூலை அதிகப்படுத்த செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தப்பாருங்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 15, 20, 21, 23, 30, 31 மற்றும் ஜூன் 8, 9, 10, 11, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 24,25,26ம் தேதி காலை 10.11 மணி வரை.

மீனம்

தொலைநோக்குச் சிந்தனையும் மற்றவர்களுக்கு தொந்தரவு தராத குணமும் கொண்ட நீங்கள், சில இடங்களில் மௌனமாக இருந்து சாதிப்பவர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். அப்ரூவலுக்கு அனுப்பியிருந்த கட்டிட மாதிரி வரை படத்திற்கு அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள்.

ராசிக்கு செவ்வாயும், கேதுவும் லாப வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னை தீரும். குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுடைய ராசிக்கு 2ல் அமர்ந்து சேமிப்புகளை கரைத்து, உங்களுக்கும் தந்தையாருக்குமிடையே கருத்து மோதல்களை உருவாக்கிய சூரியன் இப்போது 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். அவரின் உடல் நிலையும் சீராகும்.

யதார்த்தமாகவும், இங்கிதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்ப வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடனால் சரி செய்ய வாய்ப்பிருக்கிறது. குரு 8ல் மறைந்திருப்பதால் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் இருக்கும். சனிபகவான் 10ல் நிற்பதால் புது வேலை கிடைக்கும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுக்கிருந்த தாழ்வுமனப்பான்மை குறையும்.

அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.

பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். மருந்து, பெட்ரோகெமிக்கல், ஸ்டேஷனரி, கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களும் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள்.

உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைத்த போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள், படிப்பில், தகுதியில் குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

அதைக் கண்டு ஆதங்கப்படுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் புது வேலை கிடைக்கும்.

கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் இப்போது மீண்டும் தொடங்கும். உங்களுடைய கலைத்திறன் வளரும்.

விவசாயிகளே! இரவு, விடியற்காலை நேரத்தில் நிலத்திற்கு செல்லும் போது கவனமாக இருங்கள். பூச்சி, தேள் வகைகளால் அச்சம் உண்டாகும். மாற்றுப் பயிறுக்கு யோசியுங்கள். போராட்டத்தில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 18, 19, 22, 23, 24, 25, 31 மற்றும் ஜூன் 1, 2, 3, 4, 10, 11, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 26ம் தேதி காலை 10.11 மணி முதல் 27, 28ம் தேதி மாலை 5.44 மணி வரை.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்