நீங்கள் பிறந்த கிழமை இதுவா? இதை செய்தால் அதிர்ஷ்டமாம்

Report Print Trinity in ஜோதிடம்
1222Shares
1222Shares
ibctamil.com

ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர்களின் குணநலன்கள் மற்றும் அவர்கள் நல்வாழ்விற்கு செய்ய வேண்டிய விடயங்களை ஜோதிடத்தின் அடிப்படையில் கூற முடியும்.

அதன்படி அவரவர் பிறந்த கிழமையின்படி செய்ய வேண்டியவைகளை செய்து வர நல்வாழ்வும் பேரதிர்ஷ்டமும் உண்டாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தின் திசை நோக்கி திரும்பும்.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் கடினமான வேலைகளை எளிதாக செய்து முடிக்க கூடிய சாமர்த்தியசாலிகள். தலைமை பண்புகள் கொண்ட இவர்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். அனைவருக்கும் உதவி செய்வார்கள்.

ஞாயிறு அன்று அதிகாலை ஆதித்யஹ்ருதயம் பாராயணம் செய்வது இவர்கள் வாழ்வில் ஆரோக்கியம் மேம்பட உதவி செய்யும். ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்த்து சிவப்பு அல்லது ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு வண்ணங்களில் ஆடை அணிவது இவர்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். கிழக்கு திசை இவர்களுக்கு ராசியாக இருக்கும்.

திங்கள்கிழமை

வேடிக்கையாக பேசும் திங்கட்கிழமைக்கார்கள் பெரும்பாலும் அமைதியானவர்கள். பல விடயங்களின் அறிவு எப்போதும் இவர்களிடம் கொட்டி கிடைக்கும். சகிப்பு தன்மை , மரியாதை, கடவுள் பக்தி போன்ற குணங்கள் சிறப்பானதாக இருக்கும். சுயநலமற்றவர்கள் என்பதால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திப்பார்கள்.

திங்கள்கிழமை அதிகாலை குளித்துவிட்டு பெற்ற தாயை வணங்க வேண்டும். அதன்பின் வெள்ளை நிற பூக்கள் கொண்டு அம்பாள் வழிபாடு செய்து கற்கண்டு கொண்டு நைவேத்யம் செய்ய வேண்டும். இவர்கள் சந்தன நிறம், ஐவரி நிறம் மற்றும் வெண்மை நிறத்தில் உடை அணிவது நன்மை தரும்.

செவ்வாய் கிழமை

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் அறிவாற்றல் மிகுந்தவர்களாகவும் கலை ரசிகர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாத இவர்கள் தனக்கென ஒரு கருத்தை வைத்திருப்பார்கள். தங்கள் நேசத்திற்குரியவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் துணிச்சலோடு உதவி செய்வார்கள். நல்லவருக்கு நல்லவராகவும் கெட்டவருக்கு கெட்டவராகவும் வாழும் இவர்கள் பலரின் வெறுப்புக்கும் ஆளாவார்கள்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை அரளிப்பூக்கள் கொண்டு முருக பெருமானை வழிபட்டால் வாழ்வு வளம் பெரும் . அன்று மாலை காலபைரவருக்கு துவரம்பருப்பினால் செய்த நைவேத்தியத்தை அளிக்க வேண்டும். இவர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் இவர்கள் ஆடை அணிவது நல்லது.

புதன்கிழமை

புதன் கிழமை பிறந்தவர்கள் அறிவு கூர்மையோடு பல திறமைகளுக்கு அதிபதியாக விளங்குவார்கள். இவர்கள் ரகசியங்களை வாழ்நாள் முழுதும் காக்க கூடியவர்கள். மற்றவர் உணர்வுகளை புரிந்து அதன்படி செயல்படுவார்கள்.

இளமையான தோற்றமும் இனிமையான சுபாவமும் இவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் படி மற்றவர்களை நடந்து கொள்ள வைக்கும். மற்றவர்களது கருத்துக்களை சார்ந்து தங்களது முடிவுகளை இவர்கள் எடுப்பார்கள்.

புதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு மகாவிஷ்ணுவை இவர்கள் வழிபட வேண்டும். பாசிப்பயிறு சுண்டலை நைவேத்யம் செய்து விஷ்ணு பாராயணம் செய்வது இவர்கள் வாழ்வை சிறப்பானதாக மாற்றியமைக்கும். இவர்கள் பச்சை மற்றும் இளநீலம் கலந்த ஆடை அணிவது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் உடையவர்கள் என்பதால் நல்ஒழுக்கமும் உயர்ந்த பண்புகளும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். பேச்சாற்றலும் எழுத்தாளுமையும் மிக்க இவர்கள் உதவி, உண்மை, நீதி நியாயம் ஆகிவற்றை கடைபிடிப்பார்கள். தன்னை சார்ந்தவர்களுக்கு உதவி செய்வார்கள்.

வியாழக்கிழமை அதிகாலை தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தை பாராயணம் செய்து அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பெரும்பாலும் தங்க நிற ஆடைகளை அணிவது இவர்களுக்கு நன்மை தரும்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் கலைகளில் அதி ஆர்வமும், எதிர்பாலினரை ஈர்க்கும் தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பார்க்க சாதுவாக இருப்பினும் சில சமயங்களில் அதீத கோபம் கொள்வதும் இவர்கள் இயல்பு. எந்த காரியம் செய்தாலும் அதில் லாபநஷ்டத்தை கணக்கு பார்த்து அதன் பின்தான் செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப்பூக்கள் கொண்டு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் பாராயணம் செய்து அம்பிகையை வழிபட்டு வர வேண்டும். இவர்கள் ஆடைகளில் வெண்மை நிறம் கொண்ட ஆடைகள் அணிந்தால் வெற்றி நிச்சயமாகும்.

சனிக்கிழமை

சனிக்கிழமை பிறந்தவர்கள் பொறுமையுடனும், நீதி நேர்மையுடனும், தனது வேலைகளை முடித்து விட்டுத்தான் மற்ற வேலைக்கே செல்லும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுடைய கஷ்டங்களை இவர்களால் தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும் தனது பாதையில் தொடர்ந்து நடக்கக்கூடியவர்கள் இவர்கள்.

சனிக்கிழமை அதிகாலை எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்கு பூக்கள் மற்றும் விவம் சாதி சிவனை வழிபடுவது இவர்கள் வாழ்விற்கு சிறப்பை தரும். நீளம் சார்ந்த நிறங்களில் ஆடைகள் அணிந்தால் இவர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்