வேலை செய்யும் இடத்தில் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

Report Print Kabilan in ஜோதிடம்
889Shares
889Shares
ibctamil.com

எந்தெந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். தொழிலில் துறை சார்ந்த நபர்களிடம் இருந்து செல்வாக்கு உயரத் தொடங்கும். அரசு சார்பான பணிகளில் இதுவரை இருந்து வந்த தாமதங்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் அகலும்.

ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கு செய்யும் தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். ஆராய்ச்சி பணிகளில் இவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய லாபம் கிடைக்கும்.

மிதுனம்

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனதில் தேவையற்ற கவலைகள் உண்டாகும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனப் பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

கடகம்

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். இழந்த பொருட்களை இவர்கள் மீட்பதற்கான சூழல் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிப்பது அவசியம். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கன்னி

தொழிலில் புதுவித சலுகையும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாளாக அமையும்.

துலாம்

இந்த ராசிக்காரர்கள் கையாளும் புதுவிதமான யுக்திகளால் தொழிலில் லாபம் உண்டாகும். வாகனங்களால் லாபம் உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களின் ஆதரவால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பார்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.

தனுசு

தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய நபர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சுகளில் கவனம் வேண்டும். பொருளாதார நிலையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

மகரம்

உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற எண்ணங்களால் மனதில் குழப்பம் உண்டாகும்.

கும்பம்

தொழிலில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மீனம்

தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி முன்னேற்றமான சூழல் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அயல்நாட்டு பயணங்களால் சாதகமான நிலை உண்டாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்