இந்த ராசிக்காரர்கள் சனீஸ்வரருக்கு எள் தீபம் போட்டால் வெற்றி கிடைக்குமாம்!

Report Print Trinity in ஜோதிடம்
652Shares
652Shares
ibctamil.com

ஒவ்வொரு ராசிக்கான வாரப்பலன்களையும் பரிகாரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

வீட்டில் இருப்பவரிடம் கோபமாக பேசாதீர்கள் உங்கள் முயற்சிகள் ஆரம்பத்தில் தடை தந்தாலும் இறுதியில் வெற்றியையே தரும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பெரியவர்கள் ஆசி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பங்காளிகள் உதவுவார்கள். இந்த வாரத்தில் பெருமாளை வழிபட்டு வந்தால் நன்மைகள் இருமடங்காகும்.

ரிஷபம்

உங்கள் வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம் இது. புதிய முயற்சிகள் தாராள பணவரவிற்கு வழி வகுக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான செய்திகள் வரும். வீண் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். கவனம். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மகாலட்சுமியை வழிபடுங்கள் நன்மைகள் அதிகமாகும்.

மிதுனம்

நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும். உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் சிறு தடங்கல் ஏற்படலாம். கவனம். வெளியூர் பயணம் அனுகூலமாக அமையும். எதிர்பாலினத்தவரிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். கூட்டு தொழில் ஏற்படவும் வாய்ப்புண்டு. சிவபெருமானை வணங்கி வந்தால் சிக்கல் விலகும்.

கடகம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்யோகத்தில் வேலைப்பளு கூடும். முழு கவனத்தோடு செயல்களை செய்யவும். ஸ்ரீ ராமரை வணங்கி வந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

புதிய சூழல்கள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களோடு வாக்குவாதத்தை தவிர்க்கவும். சேமிப்பு அதிகமாகும் அளவிற்கு பணவரவு இருக்கும். வஹக்கை துணையோடு அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். குழந்தைகள் மீது ஒரு கண் வைப்பது நல்லது. தந்தை வழி உறவுகள் உதவுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது வீட்டில் நிம்மதியை பெறுக செய்யும்.

கன்னி

சமூக பணிகளில் ஈடுபடுபவருக்கு நன்மையான காலம் இது. திறமையான பேசினால் அனைவரையும் வசப்படுத்துவீர்கள். ஆன்மிக பயணங்கள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் லாபம் ஏற்படும். நண்பர்கள் உதவுவார்கள். பெரியோர்கள் ஆசி கிடைக்கும். உத்யோகத்தில் உடன் வேலை செய்பவர்கள் நெருங்கி பழகலாம். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வர தன்னம்பிக்கை பெருகி மகிழ்ச்சி நிலவும்.

துலாம்

தொழில் மேம்பாடுகள் தொடர்பான முயற்சிகள் இனிதே நடந்தேறும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும். எதிர்பாராத உறவினர் வருகையால் வீடு முழுவதும் மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. ஆன்மிக பயணங்கள் நடக்கும். வெளியே உங்கள் செல்வாக்கு உயரும். ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் சந்தோஷம் பலமடங்காகும்.

விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லவும். விளையாட்டுத்துறையை சார்ந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பணியில் மேன்மை உண்டாகும். தொழிலும் அவ்வாறே. யாரிடம் பேசும்போதும் கவனமாக இருக்கவும். விநாயகரை வழிபட்டு வந்தால் வெற்றி கிட்டும்.

தனுசு

தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உறவினர்களால் சாதகமான சூழல் ஏற்படும். பொருளாதார மேன்மை உண்டு. பெரியோர்களின் ஆசிர்வாதம் உண்டு. எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். மாணவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். திருமண எண்ணங்கள் நிறைவேறும். பெரியவர்களிடம் ஏற்பட்ட கசப்புகள் மறையும். அய்யப்பனை வழிபட்டு வர அன்பும் நிம்மதியும் பெருகும்.

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முக்கியமான அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தொழில்களில் மேன்மை உண்டாகும். நண்பர்களுடன் மகிழ்வாக இருப்பீர்கள். உறவினர் மூலம் மதிப்பு உயரும். கால்நடைகள் இருந்தால் அதன்மூலமும் மதிப்பு உயரும். மாணவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மனைவி வழி சொந்தங்கள் மகிழ்ச்சியை கொண்டு வருவார்கள். சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சங்கடங்கள் விலகும்.

கும்பம்

உயர் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். புதிய நபர்களால் நன்மை உண்டு. பதவி உயர்வு கிடைக்கலாம். எதிர்பார்த்த முடிவுகள் வர தாமதமாகும். கடன் வாங்க நேரிடலாம். வீடு மனை வாங்கும் எண்ணத்தை தள்ளி போடவும். வெளியூர் பயணங்கள் அனுகூலம் தராது. குழந்தைகள் உடல்நிலை பாதிக்கும். பொருள்களை கவனமாக பார்த்து கொள்ளவும். துர்க்கை அம்மனை வழிபட்டு வர நிம்மதி நிலைக்கும்.

மீனம்

பணிபுரியும் இடங்களில் கவனம் தேவை. தொழில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். ஆன்மிக பயணங்கள் மனநிம்மதி தரும். உடன்பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை நடைபெறும். வர்த்தகம் பெருகும். குரு பகவானை வழிபட்டு வர சந்தோஷங்கள் பல மடங்காகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்