இன்று இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா... கொட்டப் போகுது பணமழை !

Report Print Trinity in ஜோதிடம்
771Shares
771Shares
ibctamil.com

12 ராசிகளில் இன்று யார் யாருக்கு பண வரவு யாருக்கு செலவு என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி காரர்களுக்கு பணவரவு இருந்தாலும் செலவுகள் இருக்கும். பிள்ளைகள் வாகனம் வகைகளில் செலவு வரலாம். கணவன் மனைவி இடையே ஊடல் இருந்தாலும் பின்னர் அது கூடலில் முடியும். உறவினரிடம் கவனம் தேவை. ராசியான நிறம் பச்சை, சிவப்பு. ராசியான எண்கள் 1,3

ரிஷபம்

இன்று சந்திரனால் குழப்பம் மற்றும் அலைச்சல் இருக்கும் வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லவும். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சந்திராஷ்டம நாட்களில் பெரும்பாலும் அமைதியாக இருப்பது நன்மை தரும். ராசியான நிறம் வெண்மை மற்றும் மஞ்சள். ராசியான எண்கள் 2,7

மிதுனம்

பணவரவும் உற்சாகமும் மேம்படும், இருப்பினும் விரய செலவுகள் வந்து போகும். யோசித்து செலவு செய்வது அவசியம். நகைசுவையான பேச்சில் நினைத்த காரியம் முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் முக்கிய ஆர்டர்கள் கிடைக்கலாம். வழக்கை துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். ராசியான நிறம் ஆரஞ்சு மஞ்சள், ராசியான எண்கள் 1,3

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உத்யோகத்தில் உயர்வு நிலையம் பதவி உயர்வும் கிடைக்கலாம். புதிய வேலை கிடைக்கும். கனவுகள் நனவாகும் நாள். மணவாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். ராசியான நிறம் பச்சை. ராசியான எண்கள் 5,7

சிம்மம்

அலுவலகத்தில் சோர்வு ஏற்படலாம். இணையதளங்களில் வலம் வந்து உயர் அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம். திருமண பேச்சுக்கள் சாதகமாகும். உறவினர் வருகையால் நன்மை கிட்டும். புது வாகனம் வாங்கும் யோகம் அல்லது பழைய வாகனத்தை புதுப்பிக்கும் யோகம் உண்டு. சுப செலவுகள் ஏற்படும். ராசியான நிறம் வெண்மை , இளமஞ்சள் ராசியான எண்கள் 6,9

கன்னி

வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியை தரும். பணவரவு அதிகமாகவே இருக்கும். வாழ்க்கை துணையோடு நல்ல விதமான உறவு இருக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் பாடங்களில் கவனமாக இருப்பார்கள். ராசியான நிறம் சிவப்பு ராசியான எண்கள் 5,9

துலாம்

காரிய தடைகள் ஏற்படும் பின்னர் நல்ல விதமாகவே முடியும். தொழிலில் வீண் அலைச்சல் ஏற்படலாம். வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் யோகம் ஏற்படும். பணவரவு நல்லவிதமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கை துணை உறவு சுமாராக இருக்கலாம். ராசியான நிறம் மஞ்சள் வெளிர்பச்சை. ராசியான எண்கள் 3,7

விருச்சிகம்

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கொடுத்த வேலைகளை செய்து முடிக்கும் திறன் ஏற்படும். குடும்பத்தினரை அனுசரிப்பதன் மூலம் நிம்மதியாக நாள் நகரும். ராசியான நிறம் நீளம், வெளிர் ப்ரவுன் ராசியான எண்கள் 2,6

தனுசு

சின்ன சின்ன தடுமாற்றம் ஏற்படும். காதல் விவகாரத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரம் நன்றாக இருக்கும். முக்கியமானவர்களுடன் வார்த்தைகளில் கவனம் வைத்து பேசவும். பிள்ளைகளின் எதிர்கால நலன் மேம்படும். அக்கபக்கத்தினருடன் சண்டை வேண்டாம். காரியத்தடை ஏற்பட்டு விலகும். ராசியான நிறம் நீலம் பச்சை. ராசியான எண்கள் 5,9

மகரம்

குடும்ப பெண்களுக்கு பதட்டம் வீண் அலைச்சல் போன்றவை ஏற்படும். தந்தை உடல்நலம் சீராக இருக்கும். கடமைகளை தவற விட வேண்டாம். பூர்விக சொத்துக்கள் பிரச்சனைகள் சுமுகமாகும். பிள்ளைகள் மேல் கவனம் வேண்டும். ராசியான நிறம் வெளிர் மஞ்சள் , சிவப்பு. ராசியான எண்கள் 3,9

கும்பம்

அம்மாவின் உடல்நலம் பாதிக்கலாம். புதிய உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். தானம் செய்யவும் ஆன்மிக பணிகள் செய்யவும் ஏற்ற நாள் இன்று. நீண்ட தூரப்பயணங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாரான வேகத்தில் இருக்கலாம். ராசியான நிறம் பச்சை மஞ்சள் ராசியான எண்கள் 5,9

மீனம்

எதிர்பாராத இடமாற்றம் வேலை மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் செலவினங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். ப்ரியத்திற்குரியவர்களிடம் குற்றம் பார்க்காதீர்கள். உத்யோகத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் செயல் திருப்திகரமானதாக இருக்கும். ராசியான நிறம் வெள்ளை ராசியான எண்கள் 6,9

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்