இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தான் சாதகமான நாள்

Report Print Kabilan in ஜோதிடம்
490Shares
490Shares
lankasrimarket.com

ரம்ஜான் நாளான இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் சாதகமான நாள் என்று பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் சுப விரயம் உண்டாகும். இவர்கள் இன்று நண்பர்களுடனான பயணங்களினால் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வாகனப் பயணங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு இன்று மேன்மையான நாள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு கால்நடைகளினால் லாபம் உண்டாகும். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விருந்துகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்ச்சி அடைவார்கள்.

கடகம்

அனைத்து விடயங்களிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவார்கள். தங்களது பேச்சுக்களால் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களினால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சுப செய்திகள் வந்தடையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சுயதொழிலில் இவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டு பயணங்களினால் தனலாபம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களில் சுயதொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் அடைவார்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள் இன்று. தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்