இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

Report Print Kabilan in ஜோதிடம்

இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்கள், எந்தெந்த விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். மனதில் சிறுசிறு தேவையற்ற குழப்பங்கள் வந்து போகும்.

ரிஷபம்

பொது காரியங்களில் ஈடுபடும் நபர்கள் கொஞ்சம் அமைதி காத்திருப்பது நல்லது. ஏதேனும் முக்கிய முடிவெடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனையை பெறுவது முக்கியம். வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.

மிதுனம்

உறவினர்களிடம் கொஞ்சம் அமைதியை கடைபிடிக்க வேண்டும். எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறவினர்களின் கவலையால் மனச்சோர்வு உண்டாகும்.

கடகம்

கடன் தொல்லை உண்டாகும் வாய்ப்பு உண்டு. உறவினர்களிடம் மனக்கசப்பு வந்து போகும். தொழிலில் அலைச்சல்கள் இருந்தாலும் பிறகு அனுகூலங்கள் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.

சிம்மம்

இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். நினைத்த காரியங்களை முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் வேலை அதிகரிக்கும்.

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சிறிது கவனத்துடன் செயல்பட வேண்டும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. வீடு சம்பதப்பட்ட விவகாரங்களில் தடைகள், தாமதங்கள் உண்டாகும்.

மகரம்

ஞாபக மறதி அதிகமாக வந்து போகும். தேவையில்லாதவர்களிடம் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வீண் விவாதங்கள் மன கசப்புகளை ஏற்படுத்தும். உடல் சோர்வு உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேற கொஞ்சம் கால தாமதமாகும். பெற்றோர்கள் பற்றியும், அவர்கள் உடல் நலம் குறித்தும் அக்கறையும், கவலையும் அதிகரிக்கும்.

கும்பம்

தொழிலில் கவனமாக இருப்பது அவசியம். தொழிலில் புது முதலீடுகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கால்நடைகள் பராமரிப்பிலும் கவனம் முக்கியம். சகோதர, சகோதரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers