இன்று சனிபகவானால் பயனடையப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

Report Print Kabilan in ஜோதிடம்

சனிபகவானால் இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், பாராட்டுக்களும் கிடைக்கப்போகிறது என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவிகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை, வாகனச்சேர்க்கை உண்டாகும். அறிவு சார்ந்த ஆராய்ச்சியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பணியில் மேன்மை உண்டாகும். பொது தொண்டில் ஈடுபடுபவர்கள் பிறரால் புகழப்படுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பேச்சுத்திறமையால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். ஆனால், செய்யும் வேலைகளில் கவனமும், பொருள்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் சுப செய்திகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு இன்று சாதமான நாளாக அமையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். அரசிடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வாக்குவாதத்தினால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவார்கள். அன்றாட செயல்பாடுகளில் இன்று நிறைய மாற்றங்கள் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவார்கள். வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers