இந்த மாதம் அதிர்ஷ்ட லட்சுமி யார் யார் வீட்டுக் கதவுகளை தட்ட போகிறார் - ஜுலை மாத ராசி பலன்கள்

Report Print Trinity in ஜோதிடம்
1109Shares
1109Shares
lankasrimarket.com
ஜுலை மாத ராசி பலன்கள்

மேஷம்

இந்த மாதம் நீங்கள் பிறருக்கு தானம் செய்ய கூடிய நல்ல மாதமாக இருக்கும். போர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய காரியங்களுக்கு உங்களுக்கு இந்த மாதத்தின் பிற்பகுதியில் பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஊடல்கள் தோன்றலாம் பொறுமையாக இருக்கவும்.

கல்யாண கனவுகள் பூர்த்தியாகும். மாதம் முழுக்க மாணவர்கள் சாதிப்பார்கள். கடன் பிரச்னைகள் அதிகரிக்கலாம். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல்நலத்தில் அக்கறை தேவை. இந்த மாதம் நல்லவைகள் நடக்கும் மாதம். விநாயகரை வழிபடவும்.

ரிஷபம்

இந்த மாதம் அதி அற்புதமான மாதம். அதிக அதிர்ஷ்டங்கள் குவிய போகிறது. கல்யாணத்தடைகள் விலகும். கவலைகள் தீர கூடிய மாதம்.

தனவரவு அதிகரிக்கும். அரசு உத்யோகங்களில் இருப்பவர்களுக்கு அதிக அனுகூலம் உண்டாகும். கம்ப்யூட்டர் தொழில் செய்பவருக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும்.

வெளிநாடு வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு பணி மாற்றுதல் அமையும்.

வங்கி கடன் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். இந்த மாதம் எல்லாவகையிலும் சிறந்த மாதமாக அமைகிறது. வெளியூரில் இருந்து வரும் ஒரு போன் கால் உங்கள் வாழ்வை மாற்றும். மஹாலக்ஷ்மியை வணங்கி வரவும்.

மிதுனம்

மிகுந்த யோகங்களை அள்ளி தர கூடிய மாதம். அதிர்ஷ்டலக்ஷ்மி வாசக்கதவை தட்டும் நேரம் இதுதான். கார் வாங்குவீர்கள். வீடு கட்டுவீர்கள்.

மாதத்தின் பிற்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடியும். நீங்கள் பிரகாசமாக மாற கூடிய மாதம் என்பதால் உங்கள் தைரியத்தால் நீங்கள் அதிகம் வரவு பெறுவீர்கள்.

தொட்ட காரியம் துலங்கும். வாக்கு மேன்மையடையும். மாணவர்களுக்கு அனுகூலமான மாதம். கணவன் மனைவி உறவு மேம்படும். ஞானமார்க்க சிந்தனைகள் கூடும். சகோதர உறவு வலுப்படும். வியாபாரம் கொடிகட்டி பறக்கும். சனி பகவானை வணங்கி வரவும்.

கடகம்

இந்த மாதம் பயணங்கள் அதிகரிக்கும். விற்பனையாளர்கள் புகழ் பெறுவார்கள். நிறுவன மாற்றம் ஏற்படும். புதிய வேலைகள் கிடைக்கும். மாத ஆரம்பத்தில் குழப்பங்கள் இருக்கும் ஆனால் இறுதியில் எல்லாம் தெளிவாக சிறப்பாக முடியும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சிலர் புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். உங்களுடைய வாக்கு ,வருமானம் , குடும்பம் ஆகியவை பாதிக்கப்படலாம். கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆகவே பொறுமையோடு இந்த மாதத்தை கடக்க வேண்டும். விரும்பியவரை மணக்கலாம். காதில் வலி ஏற்படலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். முன்னேற்றம் ஏற்படும். முருகர் வழிபாடு நலம் பயக்கும்.

சிம்மம்

உங்கள் வெளிச்சத்தால் பலர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு கருணை மனம் உண்டு கண்டிப்பும் உண்டு. வாழ்வில் முன்னேற்றத்திற்காக நீங்கள் பண்ண வேண்டும் என்று யோசித்த விடயங்களை இந்த மாதத்தில் பண்ணிவிடுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயங்கள் சாதகமாக முடியும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி உண்டு. பொதுமக்கள் தொடர்பான அரசு விடயங்களில் கவனம் தேவை. விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் அதிர்ஷ்டம் பெருகும். உடல்நலம் பாதிக்கும். கவனம் தேவை. பிள்ளைகள் சந்தோஷம் தருவார்கள். மாணவர்களுக்கு நல்ல மாதம். பணவரவு இருக்கும். அதற்கேற்ற முதலீடு தேவை. செல்வா செழிப்பான மாதமிது.

கன்னி

கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். மதத்தின் முதல் 15 நாட்களில் பணவிரயம் பண வரவும் ஏற்படும். இந்த மாதம் ஏற்றமான மாதமாகும். நரசிம்மரை வணங்கி வரவும். மாணவர்கள் சற்று சிரமத்துடன் முன்னேறுவார்கள். கல்யாணத்தடைகள் நீங்கி சுப பேச்சு வார்த்தைகள் நடைபெறும். போகரை வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும். இளைஞர்களுக்கு ஏற்றமான மாதம். பெண்களுக்கு சந்தோஷமான மாதம். எதிரிகள் விடயத்தில் சமாதானமாக போய் விடுவது நல்லது. குழந்தைகள் மேல் கவனம் தேவை. தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. இந்த மாதம் நன்மையாகவே அமையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை அமைய கூடிய மாதமாக இருக்கிறது. யோகமான மாதம் இது. குலதெய்வ அருள் , பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலன் ஆகியவை கிடைக்கும். வீடு கட்ட யோகம் ஏற்படும். மிக பெரிய தடைகள் விலகும். இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் திருப்தியாக முடியும். மாணவர்களுக்கு அற்புதமான நேரம். உடல் நலனில் கவனம் தேவை. கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு பிரம்மாண்ட வெற்றிகள் கிடைக்கும் நேரம் இது. சகோதரர் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பெண்கள் சாதிப்பார்கள். வியாபாரிகள் செழிப்பார்கள். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.

விருச்சிகம்

இந்த மாதம் முழுதும் நன்மைகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்கள் ஜெயிக்கும். உங்கள் முடிவுகள் சரியாக இருக்கும். கல்யாண யோகங்கள் கூடிவரும். வேலை தேடும் பெண்களுக்கு வேலை அமையும். மருத்துவர்களுக்கு நினைத்தது நடக்கும். வியாபாரிகளுக்கு அனுகூலமான மாதம் இது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். மின் சாதனங்களை கையாளும்போது கவனம் தேவை. சேமிப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் சலசலப்பு ஏற்படும். கந்தர்ஷஷ்டி படிக்கவும். இந்த மாதம் சாதகமான மாதம்.

தனுசு

இந்த மாதம் லாபகரமாக இருக்கும். சில இடையூறுகள் ஏற்படும். இருப்பினும் மாதத்தின் பிற்பகுதியில் சரியாகும். பணியில் துன்பங்களை சந்திக்க நேரிடலாம். வேறு வேலை தேடும் எண்ணம் ஏற்படும். விரயங்கள் ஏற்படும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் இந்த மாதத்தில் பண்ணலாம். முன் கோபங்கள் வரலாம். குறைக்க வேண்டும். புதிய வீடு கட்ட கூடிய யோகம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்படும். மனைவியோடு பிரச்னை வரலாம். பொறுமையோடு இருக்க வேண்டிய மாதம் இது. வெளிநாடு வாய்ப்புகள் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. வாகன ஓட்டிகள் உஷாராக இருக்க வேண்டும். துர்க்கை அம்மனை வழிபடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

மகரம்

தாமரை பூ போல உங்கள் வாழ்க்கை மலரும். உங்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். இட மாற்றங்கள் அமையும். அதற்கு தயாராகி கொள்ளுங்கள். இந்த மாதம் சிவப்பு வண்ணத்தை அதிகம் பயன்படுத்துங்கள். முருகன் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். பயணம் செய்து தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் மேன்மை அடைவர். தன விரயம் ஏற்படும். மருத்துவ செலவுகள் கூடும். வாகன யோகம் உண்டு. மாணவர்கள் படிப்பில் பின்தங்கியே காணப்படுவர்.வெளிநாட்டில் வேலை தேடுபவருக்கு சாதகமாக அமையும். சரும பிரச்னைகள் ஏற்படும். ஆகவே அதில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் பாதிப்பு ஏற்படும். ஆதித்ய ஹிருதயம் படிப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பொங்கும். தனவரவு மேம்படும். பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பார்கள். மனைவி உறுதுணையாக இருப்பார்கள்.பிள்ளைகள் கல்வி மேம்படும். வியாபாரம் செழிக்கும். வியாபார கடன் வாங்க நேரிடும். அதுவும் நல்லதாகவே அமையும். வங்கிப்பணியாளர்கள் அலுவலக பணி சுமையால் பாதிக்கப்படுவார்கள். பெண்களுக்கும் பணி சுமை இருக்கும். உடல்நலம் கவனிக்கவும். முதுகுத்தண்டு பிரச்னைகள் ஏற்படலாம். சூரிய நமஸ்காரம் செய்தால் நன்மைகள் நடக்கும். மின்சாதனங்களில் கவனம் தேவை. சகோதரர் ஒத்துழைப்பு கூடும். மாணவர்களுக்கு பிரமாதமான மாதம் இது. கடன் அதிகமாக வாங்கி விட வேண்டாம். எதிரிகள் வெற்றி பெறுவார்கள் ஆகவே பொறுமையாக இருக்கவும்.

மீனம்

உங்கள் வழக்கை மேம்படும். உத்யோக உயர்வுகளோடு இடமாற்றம் ஏற்படும். அய்யப்பனை வழிபட வேண்டும்.

குழந்தை பாக்கியம் வேண்டி தவித்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். காப்பீடு துறையில் பணிபுரிபவர்களுக்கு லாபகரமான மாதம் இது. புதிய வீடு வாங்கும் அமைப்பு ஏற்படும். குலதெய்வ அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். தொண்டை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும் ஆகவே கவனம் வேண்டும். செய்யக்கூடிய தொழில் சிறப்பாக நடக்கும்.மாதத்தின் பிற்பகுதி சாதகமாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர் வாழ்க்கை துணையாக அமைவார்கள். செல்வ செழிப்பு ஏற்படும். விலை உயர்ந்த பொருள்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு நல்ல காலம். பெண்களுக்கு உயர்வான காலம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்