இன்று உங்கள் ராசிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் என்னனு தெரிஞ்சிக்கலாமா? இத படிங்க

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி என்று பார்ப்போம்.

மேஷம்

முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உறவினர் மற்றும் சுற்றத்தாரின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நீங்களே எதிர்பாராமல், வரும் சுப செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

வீட்டில் பிள்ளைகளுடைய கல்வியில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டியது மிக அவசியம். பூர்வீக சொத்துக்களால் கொஞ்சம் சுப விரயச் செலவுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. வீட்டில் உள்ள மூத்தோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பொது காரியங்களில் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்களால் மகிழ்ச்சி அடையும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்

மந்த நிலையில் நினைவாற்றலில் இருந்து வந்த சிக்கல்கள், சிறு சிறு குறைகள் நீங்கி, மாணவர்கள் தெளிவு பெறுவார்கள். உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்குளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களுடைய பாராட்டைப் பெறுவீர்கள். அரசாங்கத் தரப்பினரிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருந்த அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்

பதவி உயர்வுக்கான முயற்சிகள் கை கூடி வரும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். எதிர்புாராத தன வரவுகளால் உங்களுடைய சேமிப்பு கிடுகிடு வென்று உயர ஆரம்பிக்கும். வீட்டில் மனைவியினுடைய ஆதரவினால் தன லாபங்கள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கிறது.

சிம்மம்

செய்கின்ற தொழிலில் மேன்மையான சூழல்கள் அமையும். நினைத்த காரியங்களுக்கு செயல் திட்டங்கள் தீட்டி அதை நோக்கி, முன்னேறிச் செல்வார்கள். முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லுவது நன்மையைத் தரும். வாகனப் பயணங்களினால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடைய முழு ஆதரவும் உங்களுடைய தொழிலுக்குக் கிடைக்கும். வர்த்தகத் துறையில் மேம்பாட்டுக்கான முளற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்வைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் வெற்றியும் புகழும் உண்டாகும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு ஆதரவுகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

துலாம்

மாணவர்களுக்கு உயர் கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல்கள் அமையும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வீட்டில் உள்ள பெரியோர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் உண்டாகும் முன்னேற்றத்துக்கான உதவிகள் கிடைக்கும். தொழில் போட்டிகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பேசும் போது உங்களுடைய பேச்சுக்களில் கவனம் செலுத்த வேண்டும். பணியில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பிறந்த சகோதரர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். புதிய புதிய முயற்சிகளில் எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகளை அடைய கொஞ்சம் கால தாமதமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பழுப்பு நிறமும் இருக்கிறது.

தனுசு

தொழிலில் பங்கு தாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டில் மனைவியின் உறவினர்கள் மூலம் கொஞ்சம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். தொழில் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளுக்கு நண்பர்களின் உதவிக்ள கிடைக்கும். வெளியூா் பயணங்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்

தொழில் சம்பந்தப்பட்டவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லையால் சிறிது மனக் கஷ்டங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் சம்பந்தமாக அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் லாபமே உண்டாகும். ஆன்மீக, புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கிறது.

கும்பம்

மனதில் உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்குள் மூலமாக தொழிலில் லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்

வீட்டுக்கு சொந்தங்கள், உறவினர்களுடைய வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகளால் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டமும் ஈடுபாடும் அதிகரிக்கும். கடல்வழிப் பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers