இன்று சந்திர கிரகணம்: உங்க ராசிக்கான பலன்கள் எப்படி?

Report Print Fathima Fathima in ஜோதிடம்

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது, இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

நிகழும் விளம்பி வருடம் ஆடி மாதம் 11ம் நாளான வெள்ளிகிழமை அன்று உத்திராட நட்சத்திரத்தில் கிரகணம் உண்டாகிறது.

இன்றைய நாளுக்கான பலன்கள்

மேஷம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதி கிட்டும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

விருச்சிகம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல், வீண் டென்ஷன், அலைச்சல் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கும்பம்

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள்.

சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம் இந்த எட்டு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

கிரகணத்திற்கு முன்னர் செய்ய வேண்டியவை
  • கிரகணம் தொடங்குவதற்கு முன்னர் இரண்டு மணிநேரத்துக்கு எவ்வித உணவும் எடுத்துக் கொள்ளக்கூடாது
  • கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது
  • ஆலய தரிசனத்தை தவிர்க்க வேண்டும்.
  • குடிக்கும் தண்ணீரிலும், கிரகணத்திற்கு முன் செய்த உணவுப் பொருட்கள் மீதம் இருந்தாலும் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும்.
  • கிரகணப் பட்டையை நெற்றியில் அணிய வேண்டும்.
  • கிரகண நேரத்தில் தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்து விடலாம்.
கிரகணம் முடிந்த பின்னர் செய்ய வேண்டியவை
  • கிரகணம் முடிந்த பின்பு ஆலய வழிபாடு செய்ய வேண்டும்.
  • பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
  • வீட்டை சுத்தம் செய்து புதிய உணவை சமைத்து சாப்பிட வேண்டும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்