பகுத்தறிவு நிறைந்த புத்திசாலி ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Kabilan in ஜோதிடம்
1259Shares
1259Shares
ibctamil.com

எதையும் பகுத்து ஆராய்ந்து முடிவு செய்யும் ஆற்றலை கொண்ட ராசிக்காரர்கள் யார் என்று இங்கு பார்ப்போம்.

கடகம்-விருச்சிகம்-மீனம்

இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள். ஏனெனில் இவர்கள் மற்றவர்களின் உணர்ச்சியை பகுத்தாய்வு செய்து புரிந்துகொள்வார்கள்.

அதே சமயம் இவர்கள் ஒழுங்கற்று காணப்படும் நபர்கள் ஆவர். இந்த மூன்று ராசிக்காரர்களும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள்.

இவர்களை நெருங்குவது கூட சற்று கடினமாகும். ஆனால் விஸ்வாசமும், நேசமும் கொண்டவர்களாக இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள்.

துலாம்-மிதுனம்-கும்பம்

எல்லையற்ற கனவுகளை கொண்டவர்களாக இந்த மூன்று ராசிக்காரர்களும் இருப்பார்கள். இவர்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள்.

இவர்களது உணர்திறனும் இவர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு தகுந்தாற்போல் இருக்கும். இந்த ராசிக்காரர்களின் கருத்துக்கள் பெரிதாக இருக்கும். ஆனால், அதை செயல்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.

சிம்மம்-மேஷம்-தனுசு

இந்த ராசிக்காரர்கள் எந்த பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக அதில் நுழைவார்கள். மிகுந்த துணிச்சல் கொண்ட இவர்கள், மற்றவர்களை முரட்டுத்தனமாக கையாள்வார்கள்.

எனினும், இவர்கள் தங்களது கொண்டாட்டங்களை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எனவே ஒரு விடயத்தில் இவர்கள் முழுமையாக ஈடுபட்டு செய்தால் அது சிறப்பாக முடியும்.

இந்த ராசிக்காரர்கள் தங்களது பெரிய கருத்துக்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்