குருவின் பார்வையால் செழிப்பான பலனை அடையபோகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Kabilan in ஜோதிடம்

அடுத்த குரு பெயர்ச்சி வர உள்ள நிலையில், குறிப்பிட்ட ஒரு ராசிக்காரருக்கு மட்டும் அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது.

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். நவகிரகங்களில் ஒருவரான குருவின் பார்வை பட்டால் வாழ்வில் உச்சத்தினை அடைந்துவிடலாம். குரு பகவானின் 5, 7ஆம் பார்வை சகல நன்மைகளையும் தரும்.

குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓர் ஆண்டு காலம் கொள்கிறார். அவ்வாறு அவர் குடிகொண்டால், அங்கிருந்து அவர் மற்ற ராசிக்காரர்களை பார்க்கும் பார்வையினை பொறுத்தே ஜோதிடத்தில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

மேலும் குரு பகவானை ஆலயம் தேடிச் சென்று வழிபட்டாலும் கோடி புண்ணியம் கிட்டும். இந்நிலையில் குரு பகவான் அடுத்த அக்டோபர் மாதத்தில் பெயர்ச்சி அடைகிறார்.

அவர் பெயர்ச்சி அடைய உள்ள ராசி மிதுனம். தற்போது மிதுனத்தில் 5ஆம் இடத்தில் உள்ள குரு பகவான், 6ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைய உள்ளார்.

2018 குரு பெயர்ச்சியானது துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறது. இதில் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ஐந்து ராசிகளுமே செழிப்பான பலன்களை அடையப் போகிறார்கள்.

எனினும், மிதுன ராசிக்காரர்கள் உச்சகட்ட பலனை அடைவார்கள். அவர்களுக்கு தொழில் முன்னேற்றம், வாகன யோகம், புது வீடுகள் கட்டும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

குரு பகவான் தனது 5ஆம் பார்வையால் மிதுன ராசியின் 10ஆம் வீட்டைப் பார்ப்பதால், இடையில் நின்ற வேலைகள் மீண்டும் புதுப் பொழிவுடன் துவங்கப்படும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers