செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய செய்ய வேண்டிய பரிகாரம்

Report Print Jayapradha in ஜோதிடம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்களை செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறுவர்.

அத்தகைய செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்று பார்ப்போம்.

தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்
 • வெள்ளை எள், துவரை, வெள்ளிய எள்ளினால் செய்த பலகாரங்கள் போன்றவற்றை செவ்வய கிழமைகளில் ஏழைகளுக்கு தானமாக தரலாம்.
 • முழுத்துவரையை சிகப்புத்துணியில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
செல்ல வேண்டிய கோவில்
 • வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் தடைபட்ட திருமணம் நடக்கும்.
 • செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
 • சீர்காழி அருகே உள்ள தையல்நாயகி அம்மன் மற்றும் வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சென்று வரலாம்.
செய்ய வேண்டிய பரிகாரம்
 • செவ்வாய்க்கிழமைகளில் துவரம் பருப்பை மட்டுமே உண்டு விரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும்.
 • செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் பெறலாம்.
 • செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.
 • செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
 • செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
 • செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்