உங்கள் உள்ளங்கை இந்த நிறத்தில் உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் இப்படிப்பட்டவர் தான்

Report Print Kabilan in ஜோதிடம்

ஒருவரின் உள்ளங்கை எந்த நிறத்தில் உள்ளது என்பதை வைத்து, அவரது தனிப்பட்ட ஆளுமை மற்றும் விதி பற்றி நிறைய விடயங்களை கணிக்க முடியும்.

இளஞ்சிவப்பு நிறம்

உள்ளங்கையில் இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டிருப்பவர்கள் வாழ்நாள் முழுவதிலும் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். அத்துடன் குறைவான முயற்சியிலேயே இவர்கள் அதிக வெற்றிகளை பெறுவீர்கள்.

இந்நபர்கள் ஆற்றல்மிக்கவர்களாகவும், உற்சாகமானவர்களாகவும், வாழ்க்கைக்கு நேர்மையான பார்வையையும் கொண்டிருப்பார்கள்.

மேலும், இவர்கள் ஆரோக்கியமான பார்வையைக் கொண்டிருப்பவர்களாகவும், உளவியல் ஆரோக்கியம் கொண்ட நபர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

வெள்ளை நிறம்

ஒருவரின் உள்ளங்கை வெள்ளை நிறமாக இருந்தால், அவர் குளிர் மனிதனாகவும், உள்முகச்சிந்தனை உள்ளவராகவும் இருப்பார். இவர்கள் மற்றவர்களை நம்புவது கடினம் என்பதால், குறைவான நண்பர்களே இவர்களுக்கு இருப்பார்கள்.

ஆனால், இவர்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே இவர்களின் உள்ளங்கை வெண்மை நிறத்தில் இருக்கும்.

நீல நிறம்

உள்ளங்கையில் நீல நிறத்தை கொண்டிருப்பவர்கள் மிகவும் பயந்த, மனச்சோர்வு மற்றும் இயற்கை சார்ந்து இருக்கும் தன்மை கொண்டவராக இருப்பார். இவர்கள் ரத்த சோகை, இதய அழுத்தம் மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

மஞ்சள் நிறம்

ஒருவரின் உள்ளங்கை மஞ்சள் நிறமாக இருந்தால், அவர் மிகவும் வருத்தப்படும் நபராக இருப்பார். சில நேரங்களில் அவர் நம்பிக்கையற்றவராகவும் இருக்க வாய்ப்புண்டு.

இவர் தன்னை சுற்றிய ஒவ்வொரு விடயத்திலும் தவறு கண்டுபிடிக்க முயல்வார்கள். இவர்கள் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

கருப்பு நிறம்

உள்ளங்கையின் வண்ணம் கருப்பு நிறத்தை கொண்டிருந்தால், அந்நபர் பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்வார்கள்.

இவர் தனது வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் போராட வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இந்நபர் பல ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவர் ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் அல்லது வயிறு நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சிவப்பு நிறம்

உள்ளங்கையின் நிறம் சிவப்பாக இருந்தால், அந்நபர் அதிக சக்தி கொண்டவராக இருப்பார். இவர்களது ஆற்றல் நேர்மறையாக இருந்தால், இவர்களை சுற்றியுள்ள நபர்களுக்கு அந்த ஆற்றல் பரவி மகிழ்ச்சியை கொடுக்கும்.

இந்நபர்கள் பொறுமையற்ற தன்மையை கொண்டிருப்பதால் கோபம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் சோர்வால் பாதிக்கப்படுவார்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers