உங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்

Report Print Jayapradha in ஜோதிடம்

12 ராசிக்காரர்களுக்கும் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும்.

அந்த வகையில் ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் காதல்வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

காதலில் நாயகனாக திகழ்பவர்கள் மேஷம் ராசிக்காரர்கள். இவர்களுக்கு காதலிக்கும் குணம் இருந்தாலும் அவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் அவர்களை தடுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதல் உண்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். மேலும் அவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடியாக இருப்பார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணம் உடையவர்கள். இவர்களுக்கு காதல் ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. ஆனால் இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அதிக அன்பு செலுத்துவார்கள். இந்த ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் தங்களின் சுய மரியாதையை இழக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்கள் நினைத்தபடி மட்டுமே நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவார்கள். இந்த கன்னி ராசி உள்ளவர்களுக்கு நல்ல குணம் இருக்கும். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவார்கள். இவர்கள் பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் காதலில் வெற்றி அடையாமல் விட மாட்டார்கள்.காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது வாழ்நாட்களை அதிகமாக நேரத்தை செலவழிப்பார்கள்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்களின் காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது.

மீனம்

மீன ராசிகாரர்கள் அன்பு மற்றும் பொறுமை குணங்கள் கொண்டவராக திகழ்வார்கள். இவர்களின் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி நிலை பெற்றிருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்