எந்த ராசிக்காரர்கள் எந்த நோயால் அவதிப்படுவார்கள் தெரியுமா?

Report Print Jayapradha in ஜோதிடம்

ஒருவரது ராசியைக் கொண்டு அவர்களுக்கு எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஓவ்வொரு ராசிகாரர்களுக்கும் உடலளவில் என்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள் என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியை கொண்டவர்கள் அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்களுக்கு தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே ஏற்படக்கூடும்

ரிஷபம்

இவர்களுக்கு சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள.

மிதுனம்

இரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்தை ஆள்வது புதன் கிரகமாகும். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் அடைவார்கள்.

கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. மேலும் கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.

கன்னி

கன்னி ராசிகாரர்களுக்கு மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும்.

துலாம்

சுக்கிர கிரகத்தால் ஆளப்படும் துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள்.எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மகரம்

கடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். மேலும் இவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும்.

கும்பம்

சந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும்.மேலும் இவர்களுக்கு இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள்.

மீனம்

இவர்களுக்கு மன அழுத்தம்அதிகமாகும் போது அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers