நீங்க எந்த ராசி? உங்களுக்கு இந்த நிறம் தான் அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமாம்

Report Print Jayapradha in ஜோதிடம்
883Shares

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகாரர்களுக்கும் எந்த நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை பற்றி விரிவாக கூறி உள்ளனர்.

மேஷம்

தைரிய குணம் கொண்டவர்களாக விளங்கும் மேஷ ராசிகாரர்களின் ராசியை ஆளுவது செவ்வாய் கிரகம். இவர்களுக்கு இந்த வருடம் ரத்த சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ரிஷபம்

சுக்ரன் ஆளும் ரிஷப ராசிகாரர்களுக்கு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பான பிங்க் நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் இவர்கள் சிவப்பு நிறத்தை விட்டு விலகி இருப்பது நல்லது.

மிதுனம்

புதன் கிரகம் ஆளும் மிதுனம் ராசிகாரர்களுக்கு பச்சை நிறம் தான் இவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கடகம்

சந்திர கிரகம் ஆளும் கடக ராசிகாரர்களுக்கு நீலம், வெள்ளை மற்றும் கடல் பச்சை நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

சிம்மம்

சூரியன் ஆளும் சிம்ம ராசிகாரர்களுக்கு ஆரஞ்ச் மற்றும் தங்க நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதனால் இவர்கள் முக்கியமான சந்திப்புகளுக்கு தங்க ஆபரணம் அணிந்து சென்றால் வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிகாரர்களுக்கு இளம் ஊதா மற்றும் இளமஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் தரும். வாரத்தில் புதன்கிழமை மட்டும் பச்சை நிறத்தில் உடை அணிந்தால் அதிக அதிர்ஷ்டமாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வெள்ளி கிழமைகளில் பாதி வெள்ளையான க்ரீம் நிற உடை அணியலாம். இவர்களுக்கு நீல நிறம் பெரிய அளவில் அதிர்ஷ்டம் கொடுக்கும்.

விருச்சிகம்

புதிய விஷயங்களை கற்பதில் அதிக ஆர்வம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிவப்பு, ஊதா, பச்சை போன்ற நிறங்கள் அதிக அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

தனுசு

அனைத்து விஷயத்தையும் சர்வ சாதாரணமாகவும், சுலபமாகவும் எடுத்து கொள்ளும் தனுசு ராசிக்காரர்களுக்கு மஞ்சள் நிறம் அதிக அதிர்ஷ்டம் தரும். அதனால் வியாழன் கிழமைகளில் மஞ்சள் நிற உடை அணிவது நல்லது.

மகரம்

மகர ராசிகாரர்களுக்கு சாம்பல், கருநீலம் மற்றும் நீல நிறம் போன்றவை நல்ல அதிர்ஷ்டத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு ஊதா நிறம் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். சனிக் கிழமைகளில் கருமையான நீல நிற உடை அணிந்தால், நல்ல பலன் உண்டு.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு ஊதா, வெள்ளை, இள மஞ்சள் போன்ற நிறங்கள் அதிர்ஷ்டத்தையும், அதிக மிகிழ்ச்சியையும் கொடுக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்