நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

Report Print Kabilan in ஜோதிடம்

ஒருவர் தனது வாழ்வை எப்படி வாழப் போகிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை பிறக்கும் மாதத்தை வைத்து அடையாளம் காண முடியும்.

அதே போல், ஒருவரது பிறக்கும் மாதம் அவரது குணநலத்திலும், ஆளுமையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களது குணநலன்கள் குறித்தும் இங்கு காண்போம்.

தனிமை

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்பும் நபர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்கள்.

எப்போதும் தனிமையை விரும்பும் இவர்கள், மற்றவர்களுடன் நன்கு பழகுவார்கள். ஆனால் விதிகளின் அடிப்படையில் மட்டுமே இவர்களது பழகும் விதம் இருக்கும். எனினும், தங்களது தனிமையிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள்.

புரிந்துகொள்வது கடினம்

இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் தனிமையில் இருப்பதால், இவர்களை தவறாக புரிந்துகொள்ள நேரிடும். மனதளவில் மென்மையானவர்களாகவும், இனிமையானவர்களாகவும் இருக்கும் இவர்கள் யாரையும் எளிதில் காயப்படுத்த மாட்டார்கள். எனினும், இவர்களது பொறுமையே மற்றவர்களை காயப்படுத்தலாம்.

தனித்துவமானவர்கள்

புதுமை என்பது இவர்களின் அடிப்படை பிறவி குணங்களில் ஒன்று. அதிக கற்பனைத்திறன் மிக்க இவர்களின் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறை எப்போதும் வித்தியாசமாக இருக்கும்.

இவர்கள் ஒரு விடயத்தை பார்க்கும் கோணம் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும். இந்த பண்புகளே இவர்களை தனித்துவமானவர்களாகவும், சிறப்பானவர்களாகவும் மாற்றும்.

நேர்மையான நண்பர்கள்

நேர்மை மற்றும் விஸ்வாசத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள். இவர்களின் நேர்மை எப்படிப்பட்டது என்றால், ஒருவர் மீது விஸ்வாசம் வைத்துவிட்டால் சாகும்வரை அதனை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் தங்களது நண்பர்களை ஒருபோதும் ஏமாற்றவோ, விட்டுக்கொடுக்கவோ மாட்டார்கள். அத்துடன் நண்பர்களை பாதுகாக்க எதை வேண்டுமானலும் இவர்கள் செய்வார்கள்.

அநீதியை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்

தங்களுக்கோ அல்லது தங்களை சுற்றி இருப்பவர்களுக்கோ எந்த அநீதி நடந்தாலும் இவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தங்களைச் சுற்றி என்ன தப்பு நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அத்துடன் தங்களுக்கு பிடிக்காத ஒரு விடயத்தை எதிர்க்க எப்போதும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

வசீகரமானவர்கள்

தோற்றத்தினாலும், மனதாலும் மற்றவர்களை வசீகரிக்கக்கூடிய இவர்களின் சில மர்மமான குணங்கள் அனைவரையும் ஈர்க்கும். பலரும் இவர்களின் குணம் மற்றும் புகழ் கண்டு பொறாமைப்படுவார்கள்.

உணர்ச்சிகரமானவர்கள்

இவர்கள் ஒரு செயல் நடக்கவில்லை என்றாலோ அல்லது ஒரு சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாவிட்டாலோ இவர்கள் தங்கள் சுயத்தை இழந்துவிடுவார்கள். ஏனெனில் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிகரமானவர்கள் ஆவர்.

இவர்கள் உணர்ச்சிமிகுதியை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள். இவர்களின் மென்மையான குணமே சில நேரங்களில் இவர்களது எதிரியாகும்.

அழிவை ஏற்படுத்தக்கூடியவர்கள்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அழிவை ஏற்படுத்தக்கூடிய குணத்தைக் கொண்டவர்கள். இவர்களின் முன்கோபம் இவர்கள் உருவாக்கிய அனைத்தையும் நொடியில் அழித்துவிடும். தங்களது உறவுகளில் விரிசில் ஏற்பட இவர்களே காரணமாக இருப்பார்கள்.

பொறாமை

இவர்கள் சில நேரங்களில் பொறாமை எண்ணமும், விரோத எண்ணமும் கொண்டு கொண்டவர்கள் என்பதால் இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவர்களது பலம், பலவீனத்தை அறிந்து வைத்திருப்பதால் தங்களை விட சிறந்தவர்களை பார்க்கும்போது அவர்கள் மேல் பொறாமைப்படுவார்கள்.

கோபம்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் மிகப்பெரிய பிரச்சனை முன்கோபம் தான். இவர்களுக்கு யாராவது தவறு செய்துவிட்டால், நிச்சயமாக பழிவாங்காமல் விடமாட்டார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers