இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Report Print Kabilan in ஜோதிடம்

இன்று எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் வாகன பயணங்கள் மேற்கொள்கிறபோது தேவையான ஆவணங்களை சரியாக எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் அடையும் நாள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் நிதானத்துடன் நடந்துகொள்வது அவசியம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான பயணங்களால் உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கும். உயர்பதவி வகிக்கின்றவர்களுக்கு சாதகமான நாளாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் எடுத்த காரியங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். பெற்றோர்களின் வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் தேவையில்லாத வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல்கள் உருவாகும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு நினைத்தபடி லாபம் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது. தேவையில்லாத வீண் அலைச்சல்களும் அதனால் உடல்சோர்வு ஏற்படும். சுய தொழில் புரிகின்றவர்கள் எடுக்கும் முயற்சிகள் மேலோங்கும். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பொன், பொருள் சேர்க்கையில் ஈடுபடுவீர்கள். பிரபலமானவர்களுடைய நட்பும், நெருக்கமும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய பங்குதாரர்களின் அறிமுகத்தால் நினைத்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறைய ஆரம்பிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்திட வேண்டும். உயர் பதவிக்கான முயற்சிகள் சாதகமானதாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மனதில் உள்ள கவலைகள் மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். முதலீடு சம்பந்தப்பட்ட தொழிலில் நன்மைகள் உண்டாகும். வாகன பழுதிற்கு சிறு சிறு செலவுகள் செய்ய நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளின் முழு நம்பிக்கையையும் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு விவாதங்களில் நினைத்த முடிவுகள் கிடைக்கும். பேச்சுக்களின் மூலம் வெற்றி காணும் நாள். எதிலும் பொறுமையாக செயல்பட வேண்டும். பரம்பரை சொத்துக்களின் மூலம் வீண் விரய செலவுகள் ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதுவரை தடைப்பட்டு வந்த காரியங்கள் சிறப்பாக முடிவடையும். அரசு அனுகூலத்தின் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers